வட சென்னையில் ரஜினியா.. என்ன தான் நடந்தது.. ஒரே நாளில் கிறுகிறுக்க வைத்த "மக்கள் சேவை கட்சி"
ரஜினியின் கட்சி பெயர் வெளியாகி, உடனே விளக்கம் தர என்ன காரணம்?
சென்னை: ரஜினி கட்சியின் பெயர், கட்சி ஆபீஸ், சின்னம் போன்றவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன!
ஒரே நாளில் கட்சி பெயர் வெளிவந்து, பிறகு வழக்கம்போல் பின்னாடியே வந்து, அவசரப்படாதீங்க.. கட்சி பெயர் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகி வரும் என்று கூறி சென்றது ரஜினி.. ஒரே நாளில் ஏன் இந்த குழப்பம்? ஏன் இந்த விளக்கம்?
ரஜினி கட்சியின் பெயர் "மக்கள் சேவை கட்சி" என்று நேற்று காலையில் ஒரு தகவல் வெளியானது.. அந்த பெயரில்தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்துள்ளதாகவும், அக்கட்சி சின்னம் "ஆட்டோ" என்றும், இதனை முறைப்படி ரஜினியே வந்து இந்த மாத கடைசியில் அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

சின்னம்
மேலும் அந்த கட்சி ஆபீஸ் சென்னை எர்ணாவூரின் அட்ரஸும் தரப்பட்டிருந்தது. இது வடசென்னையில் உள்ள பகுதியாகும்.. பிறகுதான் இது ஒரு டம்மி அட்ரஸ் என்று தெரியவந்தது. 2 வருடத்துக்கு முன்பே, ரஜினி தன் கட்சிக்கான பெயர், சின்னம் போன்றவற்றை முடி6வ செய்து விட்டதாகவும், சின்னம் உட்பட பலவற்றை பக்கத்திலேயே இருந்து பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் ரஜினி முடிவு செய்ததாகவும் சில பத்திரிகைகள் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டபடி இருந்தன.

கழகம்
ஆனால், ஒரு வருடத்துக்கு முன்புதான் ரஜினி தரப்பில் புது கட்சிக்காக டெல்லி தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாகவும், அதில்தான் கட்சியின் பெயர், சின்னம், அட்ரஸ் போன்றவை இருந்தன என்றும் சொல்லப்படுகிறது. முதன்முதலில் "அனைத்து இந்திய மக்கள் சக்தி கழகம்" என்கிற பெயரைதான் செலக்ட் செய்தாராம் ரஜினி... பிறகுதான், பதிவு செய்யப்பட்ட கட்சியின் பெயரில் கழகம் என்ற வார்த்தை இருந்ததை வேண்டாம் என்று யோசித்தாராம்.

மக்கள் சேவை கட்சி
அதற்கு பிறகு சேவை என்ற பெயர் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார்.. இறுதியில்தான் "மக்கள் சேவை கட்சி" என்று பெயர் மாற்றப்பட்டதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமாகதான் சில தினங்களுக்கு முன்புகூட வழக்கறிஞர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் ஆலோசித்துள்ளார்.. அந்த பெயர் வருவதற்குள் தேர்தல் கமிஷன் லிஸ்ட்டை வெளியிட்டு விட்டதாக தெரிகிறது.

லிஸ்ட்
இதற்கு தான் ரஜினி தரப்பும் உடனடியாக நேற்று மறுப்பும் வெளியிட்டது. வழக்கமாக தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாதம்தான் லிஸ்ட்டை வெளியிடும். இந்த முறை முன்னதாகவே வெளியிடவும் அதில் இந்த பெயரும் சேர்ந்து வந்துவிட்டதாம்.. இந்த மாத இறுதியில் சொன்ன தேதியில், தன் கட்சி பெயரை ரஜினி அறிவிப்பார் என்றாலும், அந்த கட்சி பெயர் உண்மையிலேயே என்னவாக இருக்கும்? என்ற அடுத்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து இன்னமும் விலகவே இல்லை.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications