ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானாம்.. சின்னம் என்ன தெரியுமா.. வெளியான பரபரப்பு தகவல்..!
ரஜினி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்திருந்த நிலையில், "மக்கள் சேவைக் கட்சி" என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ரஜினி முழுமையான அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார்.. இதற்காக புதிதாக கட்சி தொடங்க போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.. இதனை தன்னுடைய ட்விட்டர் வாயிலாகவே உறுதிபடுத்தி இருந்தார். அதன்படி, ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் இடம்பெற்றதுடன், அன்றைய தினம் முழுவதும் இதுதான் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்தது..
இந்த அதிரடியை அடுத்து, தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதற்கு பிறகு, ரஜினி தன்னுடைய நிர்வாகிகளுடன் மறுபடியும் ஆலோசனை நடத்தினார்.. கட்சியின் பெயர், சின்னம், குறித்தும், எப்போது கட்சியின் பெயரை பதிவு செய்யலாம் என்பது குறித்தும் வழக்கறிஞர்களுடன் ரஜினி ஆலோசனை மேற்கொண்டார்.. எனவே விரைவில், கட்சியின் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் கட்சிக்கு என்ன பெயர் என்னவாக இருக்கும், கட்சி கொடியின் நிறம் எப்படி இருக்கும்? சின்னம் எதை முன்னிறுத்தப்பட்டிருக்கும்? என்ற எதிர்பார்ப்புகளும் எழும்பி வந்தன.. இது சம்பந்தமான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வலம் வர ஆரம்பித்தன.
அப்போதுதான், "படை" என்று முடியும் வகையில் ரஜினியின் கட்சி பெயர் அமையலாம் என்றும், அந்த கொடியில் கண்டிப்பாக "பாபா" முத்திரை இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.. அந்த வகையில்தான் "மக்கள் சேவை கட்சி" என்ற பெயர் அடிபட்டு வருகிறது.. இந்த புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.. இந்த மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளது... வரும் டிசம்பர் 31ஆம் தேதி ரஜினி இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ரஜினி பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications