அணைந்த அரசியல் ஆசை..தவெக விஜயை எம்ஜிஆராகப் பார்க்கும் ரஜினிகாந்த்! பாஜக விட்ட தூது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அரசியலில் புதிய வரவான விஜய் வந்ததற்கு பிறகு பல மாற்றங்களை காண முடிகிறது. குறிப்பாக கட்சி ஆரம்பிப்பதாக கூறி அமைதியாக இருந்த ரஜினிகாந்த் தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவது, பாரத தேசம் என பேசுவது என அரசியலில் தன்னை ராஜகுரு போலவோ அல்லது நடிகர் சோ போல சாணக்கியனாக காட்டிக் கொள்ள விரும்புவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசியல் சினிமாவில் இருந்து புது வரவுகளை என்றுமே ஏற்றுக் கொள்ளாமல் இல்லை. கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையில் தற்போது புதிய வரவாக விஜய் வந்திருக்கிறார்.

நீண்ட காலமாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என பேசப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கு பிறகு தமிழக வெற்றிக் கழக மாநாடும் நடைபெற்றது. தற்போது கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார் விஜய்.

Rajinikanth Vijay Politics

விஜய் அரசியல்

மண்டலம் வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தொகுதி வாரியாக மக்களை சந்திக்கும் திட்டமும் விஜய்க்கு இருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இது ஒரு புறம் இருக்க தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பேசு பொருளாக மாறி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 1990களில் உச்சத்தில் இருந்தபோதே அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.

ரஜினிகாந்த் பாஜக ஆதரவு

இந்த நிலையில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் வெற்றிடம் உருவாகி இருக்கிறது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என அதிரடியாக அறிவித்தார். இதனால் பல ஆண்டுகளாக காத்துக் கிடந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். சில நாட்களிலேயே கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டு விட்டதாக கூறினார் ரஜினிகாந்த். இதனால் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

பாஜக ஆதரவாளர்

இப்படியாக அரசியல் ஆசையை வெளிப்படுத்திய ரஜினிகாந்த் அமைதியாக சென்றதற்கு பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை காரணமாக தமிழகத்தில் தன்னால் காலூன்ற முடியாது என்பதை ரஜினிகாந்த் உணர்ந்து அரசியலை விட்டு விலகினார் என அப்போது பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ரஜினிகாந்தின் செயல்கள் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ரஜினி மோடி சந்திப்பு

சீமான் உடன் சந்திப்பு, பிரதமர் மோடியுடன் சந்திப்பு, பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவ்வப்போது வீடியோக்களை விடுவது என ஊடக வெளிச்சம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் விரும்புகிறார் என கூறுகின்றனர். குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியை கொண்டு வருவார், இளைஞர்கள் ஆன்மீகம் பக்கம் செல்ல வேண்டும், இந்த மொபைல் போன் காலத்தில், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்திருக்கவில்லை என அவரும், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

விஜய் ரஜினி போட்டி

மேலும் பல நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசுவதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்திருக்கிறார். இது திமுகவுக்கு எதிரானது என அவருக்கு நன்றாகவே தெரியும். மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை விழுந்து விட்டது. அதை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது. அதே நேரத்தில் அரசியலில் தான் விட்ட இடத்தை ஒரு போட்டியாளராக பிடிக்க முடியவில்லை என்றாலும், ஒரு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது ரஜினிகாந்தின் விருப்பம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

நரேந்திர மோடி

இது தொடர்பாக சிலரிடம் பேசிய போது," 1960 முதல் கிட்டத்தட்ட ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் வரை, பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வரும் வரை அரசியலில் நடிகர் சோ முக்கிய புள்ளியாக இருந்தார். பலரும் அவருடன் ஆலோசனை கேட்பதை விரும்பினர். பல தருணங்களில் பல கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார் சோ. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னரே முன்மொழிந்தவர் அவர் தான்.

ராஜகுரு

அவரது மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் நிலவுகிறது. முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை தான் பெற முடியவில்லை, பின்னணியில் இருந்து இயங்கும் ஒரு சாணக்கியனாக, அரசியல் ராஜகுருவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் விரும்புகிறார். இவ்வளவு நாள் அந்த எண்ணம் ஓரத்தில் இருந்தாலும் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தற்போது விஜயின் அரசியல் வரவுக்குப் பிறகு சினிமாவிலும் சரி, அரசியலையும் சரி தான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதை போல ரஜினிகாந்த் உணர்கிறாராம்.

பாஜக நிகழ்ச்சிகள்

அதனால் எப்போதும் ஊடக வெளிச்சம் தன்னோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது, பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜகவுடன் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளை இணைக்கும் வேலையையும் ரஜினிகாந்த் செய்ய நினைப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் சமீப காலங்களாக பாஜக நிகழ்ச்சிகளில் அவர் அதிகமாக தலைகாட்டி வருகிறார் என்கின்றனர்.

பாஜக ஆர்வம்

அதே நேரத்தில் பாஜகவும் ரஜினியின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறது. தற்போது இல்லை என்றாலும் பிறகாவது நபரை கட்சியில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு உடன்படவில்லை. அதே நேரத்தில் மறைமுக ஆதரவு உள்ளிட்டவற்றின் மூலம் பாஜக ஆதரவாளராக தன்னை காட்டிக் கொள்ள விரும்புகிறார்.

திமுக அதிமுக

திமுக, அதிமுகவுக்கு பல நடிகர் நடிகைகள் நேரடியாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திமுகவுக்கு நட்சத்திர பட்டாளத்தின் ஆதரவு இருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் இருக்கும் அளவுக்கு தமிழகத்தில் பாஜகவுக்கான நட்சத்திர பட்டாள ஆதரவு முழுமையாக இல்லை. ரஜினி போன்ற பெரிய நடிகர் பாஜகவுக்கு ஆதரவு தரும்போது நிச்சயம் பிற நடிகர்களின் ஆதரவும் கிடைக்கும். இதனால் தற்போது இல்லை என்றாலும் பிற்காலத்தில் ரஜினியை பாஜகவின் முகமாக நிலைநிறுத்த பாஜக தலைமை விரும்புகிறது. அதனால் தான் தேசிய தலைவராக இருந்தாலும் ரஜினியுடன் நேரடியாகவே பேசி வருகின்றனர் என்கின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தல்

எது எப்படியோ 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விஜய்க்கு எதிராக ரஜினியை களம் இறக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்கு ரஜினியும் சம்மதித்து விட்டதாகவே சமீபத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் கூறுகின்றன. அதே நேரத்தில் சினிமாவிலும் அரசியலிலும் இளையவரான விஜய் தனக்கு சமமாக ரஜினிகாந்த் பார்ப்பதே சரியில்லை எனவும், வழக்கம் போல் அவரது சினிமா பயணத்தை மேற்கொள்வது சிறந்தது என்கின்றனர் ரஜினியின் நலம் விரும்பிகள்.

ரஜினியின் திட்டம்

பாஜகவுடன் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டினாலும் அந்த கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் வந்து விடக் கூடாது என்பது தான் ரஜினியும் உறுதியான எண்ணம் என்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணிக்கு பிரபலமான சினிமா முகமாக தான் இருக்கும் நிலையில் விஜய் வந்தால் விஜய்யோடு சேர்த்து ஒரு சிலரும் எம்எல்ஏக்கள் ஆகிவிடுவார்கள். இதனால் அரசியல் ரீதியாக விஜய் அங்கீகாரம் பெற்று விடுவார். அதனை விரும்பாத ரஜினிகாந்த் பிரபலமான முகமாக அதிமுக பாஜக கூட்டணிக்கு தான் இருக்கிறேன் என்பதை அழுத்தமாகவே சொல்ல விரும்புகிறார். எந்த காரணம் கொண்டும் விஜய் அதிமுக பாஜக கூட்டணிக்கு வந்து விடக் கூடாது எனவும் தீவிரமாக ரஜினிகாந்த் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படியாக விஜய்யை மனதில் வைத்து ரஜினி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+