"பிரபாகரன்"- "கருணாநிதி".. முரசொலி மாறனை அழைத்து ராஜீவ் காந்தி சொன்ன "அந்த சேதி".. புதைந்த வரலாறு!
சென்னை: திராவிடர் இயக்கத்தின் அறிவு களஞ்சியம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சி முரசொலி மாறனின் 90-வது பிறந்த நாள் இன்று. இந்திய அரசியலில் எத்தனையோ திருப்புமுனைகளின் பின்னணியில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளில் பலவற்றில் "நிழல் சாட்சி"யமாக திகழ்ந்தவர் முரசொலி மாறன்.
முரசொலி மாறனின் வரலாற்றில் எழுதப்படாத ஒரு நிகழ்வு, ராஜீவ் காந்தி- தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புடையது. இது தொடர்பாக முரசொலி மாறன் அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இப்படி பதிவு செய்திருக்கிறார். அப்போது ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் முரசொலி மாறன்.

"இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் போதே அதனை கடுமையாக பிரேமதாச (இலங்கை முன்னாள் ஜனாதிபதி) எதிர்த்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் - பிரேமதாச இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனடிப்படையில் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார் பிரேமதாச. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி என்னை வரவழைத்தார். "பிரபாகரனுக்கு நாம் உதவிகள் செய்யலாம்.. புலிகள் குறித்து உண்மை எனக்கு தெரியாமல் போய்விட்டது. முதல்வர் கருணாநிதியை விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லுங்கள். தமிழ் மாநிலம் ஒன்றை அமைக்க பிரபாகரனுக்கு நாம் உதவலாம்" என்றார். அப்போது "ஏற்கனவே பிரபாகரன் தனி மாநிலத்தைத்தான் நடத்தி வருகிறார். வரி வசூல், நீதிமன்றம் என எல்லாமே அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றேன். ராஜீவ் காந்தி சிரித்தபடியே, தமிழ் ஈழத்தின் காட்பாதர்/ பிதாமகனே திமுகதான் என கூறினார்.- இதனை திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் தாம் எழுதிய ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய உளவுத்துறை சதிகள் என்கிற நூலில் விவரித்திருக்கிறார்.
இதுபோல 1990-ல் திமுக ஆட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யோகி, ஆண்டன் பாலசிங்கம் உள்ளிட்டோர் மற்றும் இதர போராளி குழுக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை அல்லது சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. அப்போதும் முரசொலி மாறனே நேரடியாக இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்கின்றன வரலாற்றுப் பக்கங்கள்!
கருணாநிதியின் மனசாட்சி அல்லவா!
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications