1 மாதம் பரோல்.. வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்!
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார்.
Recommended Video
சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார்.
பேரறிவாளனின் அப்பாவின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை காண வேண்டும் என்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது தண்டனை காலத்தில் பெறும் இரண்டாவது பரோல் இது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட இவர், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது தூக்கு தண்டனை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைக்காக அவரின் தாய் அற்புதம்மாள் போராடி வருகிறார்.
இந்த நிலையில்தான் தற்போது சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் காரணம் கட்டி பரோல் கேட்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலம் பேரறிவாளனுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கி உள்ளது. அவர் காலை 10.30 மணிக்கு பரோலில் வெளியே வந்தார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications