திமுகவின் பினாமி நிறுவனங்களுக்காகவே செயல்பட்ட சென்னை மாநகராட்சி! ராஜ்மோகன் கடும் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் பினாமி நிறுவனங்களுக்காகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி செயல்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் கண்களை கட்டிக் கொண்டு 536 மாணவர்களும் ஒரே அசைவுகளை செய்து சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Rajmohan

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்களிடையே போதைப்பொருள் இல்லாத விளக்கத்தை உருவாக்க வேண்டும் நோக்கத்தோடு நடைபெறுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் திமுக பினாமிகளுக்காகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களும், பல்வேறு பணிகளும் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

அண்மைக்காலமாகவே தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு இருந்து வருகிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் இதுவரை அவரை மரியாதை நிமித்தமாக போய் பிரியா சந்திக்கவே இல்லை.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் இதுவரை முதல்வரை போய் சந்திக்க அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் போய் சந்திப்பேன் என்றார்.

இந்த நிலையில் முழுவாண்டு தேர்வு முடிந்து கடந்த ஜூன் மாதம், பள்ளிகள் திறப்பின் போது ஒரு பள்ளியின் கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றுவதில் பிரியாவுக்கும் திருவிக நகர் எம்எல்ஏ பல்லவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் பல்லவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது புரோட்டோக்கால்படிதான் குத்துவிளக்கேற்ற வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி ஏற்றியபிறகுதான் எம்எல்ஏ ஏற்ற வேண்டும், அமைச்சர் இருந்திருந்தால் அவர் ஏற்றிய பிறகுதான் நான் ஏற்ற முடியும், இந்த ப்ரோடோக்கால் எம்எல்ஏவுக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

அண்மையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மாநகராட்சியில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். அப்போது மேயர் பிரியா வரவில்லை என விமர்சிக்கப்பட்டது. அதற்கு பிரியா, "முதல்வர் ஆய்வுக்கு வருவதாக எனக்கு யாரும் சொல்லவில்லை" என்றார். இதற்கு ராஜ்மோகன் கூறுகையில் மேயர் பிரியா, ரிப்பன் மாளிகைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர் ப்ரோட்டோகால் பார்க்க தேவையில்லை என ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+