தாராபுரம் சத்தியபாமா கண்ணீர் விடுவதற்கு முன்பு அவரது காதில் சொன்னது என்ன? ராஜ்மோகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா காதில் சொன்னது என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். அமைச்சர் ராஜ்மோகன், காதில் ஏதோ சொன்ன அடுத்த நொடியே சத்தியபாமா அழ தொடங்கிவிட்டார் என திமுக விமர்சனம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

சென்னையில் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் 8 மணி நேரமாக காத்திருக்கிறார்கள், எனவே வேகமாக பேசுங்கள், முதல்வர் விஜய்யும் பேச வேண்டும், எனவே விஷயத்தை சொல்லி முடிங்க என்றுதான் நான் சத்தியபாமாவிடம் சொன்னேன்.

by election 2026 sathyabama vijay

மற்றபடி திமுக சொல்வது போல் எல்லாம் எதுவும் நடக்கவில்லை. இந்த முறை யாரையும் தவெக விலை கொடுத்து வாங்கவில்லை. நல்ல தலைமையின் கீழ் வரவேண்டும் என்பதற்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள்.

விஜய் தலைமையில் பணியாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் எல்லாரும் தவெகவை தேடி வருகிறார்கள். தொகுதி மக்களுடன் நல்லது நடக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல தலைமை வேண்டும், அப்படியென்றால் அந்த தலைமை விஜய் என்ற ஒரு காரணத்திற்காக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள்.

மற்றபடி பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கியது என்பதெல்லாம் அவர்களது கற்பனை! பட்டினப்பாக்கத்தில் ஏற்கெனவே ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதுவும் மீனவர்களின் இடம்தான். அந்த இடம் தற்போது சிதிலமடைந்துள்ளது. அந்த இடத்தில் சமூகவிரோதிகள் மீனவர்களுக்கே தொல்லை தரும் நோக்கில் செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அந்த கட்டடத்தை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தோம்.

மீனவர்கள் முதல் மாணவர்கள் வரை அவர்களது வாக்குகளை வாங்கிதான் நாங்கள் ஜெயித்திருக்கிறோம். அவர்களது கருத்துகளையும் நாங்கள் செவிமடுப்போம். அவர்களின் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுப்போம், இறுதி முடிவை முதல்வர் விஜய் எடுப்பார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும். அங்கு மக்கள் எழுச்சியை நானே பார்த்துள்ளேன். இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்தார்.

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். அப்போது தவெக வேட்பாளர் சத்தியபாமா, தனக்கு வாக்கு சேகரித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜ்மோகன், அவர் காதில் ஏதோ சொன்னது போல் இருந்தது.

உடனே சத்தியபாமா டோனை மாற்றி, தன்னை பெண் என்றும் பாராமல் அசிங்க அசிங்கமா பேசுகிறார்கள், போனை பார்த்தே 2 மாதங்கள் ஆகின்றன, நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறியபடியே கண்ணீர் விட்டு பேசினார். உடனே விஜய் அவரை அணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

தாராபுரத்தில் அதிமுகதான் ஜெயிக்கும் என கள நிலவரம் சொல்கிறது. சத்தியபாமாவுக்கு செல்லும் இடமெல்லாம் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் ராஜ்மோகன் ஏதோ காதில் சொல்லி அழுகாச்சி நாடகத்தை நடத்தியிருக்கிறார் சத்தியபாமா என திமுகவின் கனிமொழி, அதிமுக இன்பதுரை உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+