பத்து நாளைக்கு பிறகு வந்துட்டாரு தவெக ராஜ்மோகன்! கரூர் பேரவலம்.. அமைதியாக இருக்க ’இது’ தான் காரணமாம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், தவெக கொள்கை பரப்பு செயலாளரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தான் அமைதியாக இருப்பதாகவும், அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம் என ராஜ்மோகன் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு ராஜ்மோகன் தற்போது சமூக வலைதளத்தை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதில் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் புஸ்ஸி ஆனந்த் போன்ற முக்கிய தலைவர்களை குறிவைத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரூர் நெரிசல் பேரதிர்ச்சி
இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என கூறப்படும் நிலையில், தவெகவின் இரண்டாம் நிலை தலைவர்களுக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பல நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் தலைமறைவாகிவிட்டனர். சமூக வலைதளங்களிலும், பொதுவெளிகளிலும் கூட அவர்களை பார்க்க முடியவில்லை. அந்த வகையில், கரூர் பேரதிர்ச்சிக்குப் பிறகு, கட்சியின் மற்றொரு முக்கிய நிர்வாகியும், பிரபல பேச்சாளருமான ராஜ்மோகன் தலைமறைவாகி உள்ளார்.
தவெக தலைவர்கள்
கடந்த பல நாட்களாக அவரது சமூக வலைதள கணக்குகள் செயல்படவில்லை, மேலும் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை அவரது மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. வழக்குப் பதிவான சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு இருந்தாலும், ராஜ்மோகன் தலைமறைவாக இருப்பது ஏன் என்ற விமர்சனம் எழுந்தது. எப்போது வேண்டுமானாலும் தன் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் ராஜ்மோகன் பயந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ராஜ்மோகன் தலைமறைவு
இந்நிலையில், தான் அமைதியாக இருப்பதாகவும், அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம் என ராஜ்மோகன் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு ராஜ்மோகன் தற்போது சமூக வலைதளத்தை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
ராஜ்மோகன் விளக்கம்
இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications