ராஜ்மோகன் செல்போனுக்கு வந்த கால்.. உடனடியாக பேச்சை மாற்றிய சத்தியபாமா.. மேடையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அமைச்சர் ராஜ்மோகனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ராஜ்மோகன் பேசிய பின், உடனடியாக தவெக வேட்பாளர் சத்தியபாமா உடனடியாக பேச்சை மாற்றி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசுகையில், அமைச்சர் பெருமக்களும், எம்எல்ஏ-க்களையும் இங்குதான் பார்க்க முடிந்தது. அதேபோல் தவெகவில் உள்ள துணை பொதுச்செயலாளரும், கொங்கு மண்டலத்தின் செல்லப்பிள்ளை கேவி ராமலிங்கம் அண்ணன் அவர்களையும் என்று பேசினார்.

Rajmohan

சத்தியபாமா இந்த வார்த்தைகளை பேசிய போது மேடையில் நின்றிருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு திடீரென செல்ஃபோனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய ராஜ்மோகன், உடனடியாக செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். இதன்பின் சத்தியபாமா, நேராக நான் 2 விஷயங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன் என்று பேச்சை தொடங்கினார்.

தொடர்ந்து, என் மீது பழி சொல்கிறார்கள். ஒரு பெண் என்று பார்க்காமல் விமர்சிக்கிறார்கள். 2 மாதங்களாக நான் செல்போன் கூட பயன்படுத்துவதில்லை. சோசியல் மீடியாவில் என்னை அசிங்கமாக பேசுகின்றனர். திமுகவால் நான் பாதிக்கப்பட்டேன். தவறு இருந்தால் உங்கள் முன் நான் துணிச்சலுடன் பேச முடியுமா? என் மீது சுமத்தப்படும் பழிகள், ஆபாசமான பேச்சுகள் காயப்படுத்துகிறது.

நான் தவறு செய்யவில்லை.. அப்படி செய்திருந்தால் உங்கள் முன் நான் வந்து நின்று இருக்க மாட்டேன் என்று கண்ணீர் சிந்தினார். இதன்பின் விஜய் உடனடியாக சத்தியபாமாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் ராஜ்மோகனுக்கு வந்த செல்போன் அழைப்புக்கு பின் சத்தியபாமா உடனடியாக பேச்சை மாற்றியது கண்கூடாகவே தெரிய வந்துள்ளது.

இதனால் ராஜ்மோகனுக்கு அழைப்பு வந்தால், அப்படியான நேரத்தில் அழைத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அமைச்சர்கள் வழக்கமாக மேடையில் அமரும் இருக்கும் போது செல்போனை உதவியாளர்களிடம் கொடுத்துவிடுவார்கள். ஆனால் முதல்வர் விஜய் இருக்கும் மேடையிலேயே ராஜ்மோகன் செல்போன் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் சத்தியபாமாவுக்கு சிக்னல் கொடுப்பதற்காகவே ராஜ்மோகன் செல்போனில் பேசினாரா என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+