Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு மர்மமான அதேசமயம் செல்வாக்குமிக்க சக்தியாகவே பார்க்கப்பட்டு வருகிறார்.. அவர் அரசியலுக்கு வராவிட்டாலும்கூட, அவரது ஒவ்வொரு அசைவும் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான விதையாகவே கருதப்பட்டு வருகிறது.. அப்படித்தான் இப்போதும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்குள், சில அரசியல் கணக்குகள் மிக ஆழமாக பொதிந்துள்ளதையும் கவனிக்க முடிகிறது..!!

திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இத்தகைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Rajinikanth Rajini NDA Vijay TVK Aadhav Arjuna

ஆதவ் அர்ஜூனாவுக்கு ரஜினி பதிலடி

தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பதிலடி தந்து எதிர்வினையாற்றியிருக்கிறார்.. இதற்காக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்..

அதில், "எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி" உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

அதாவது ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் லிஸ்ட்டை ரஜினி வரிசைப்படுத்தியுள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் குறிப்பிட்டிருக்கும் பெயர்களில் பெரும்பாலானோர் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்..

என்டிஏ 4 பெயர்கள்

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை என ஒட்டுமொத்த என்.டி.ஏ தலைவர்களையும் தனது அறிக்கையில் முன்னிலைப்படுத்தியிருப்பது, ரஜினிகாந்த் தார்மீக ரீதியாக அந்த கூட்டணியின் பக்கமே நிற்கிறாரோ? என்ற சந்தேகத்தை உணர்த்துகிறது.

அதுமட்டுமல், விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், இப்படி திடுதிப்பென்று ரஜினியின் இந்த அறிக்கை, விஜய்க்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைய வாய்ப்புள்ளது..

ஜெயலலிதாவுக்கு பதிலடி

இந்த நிகழ்வை பார்க்கும்போது, 1996ம் காலகட்ட நிகழ்வையும் நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.. அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து, "அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது" என்று ஒரு ஒற்றை வரியால் ஆட்சியை மாற்றிய வரலாறு ரஜினிக்கு உண்டு.. இன்று அதே பாணியில், விஜய்யின் கட்சி நிர்வாகிக்கு எதிராக ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களையும் திரட்டி காட்டியிருப்பது, விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ரஜினி கொடுக்கும் ஒரு மறைமுக அழுத்தமாகவே கருதப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை ரஜினி "உண்மைக்கு மாறானது" என்று முத்திரை குத்தியதன் மூலம், தவெக-வின் ஆரம்பகால அரசியல் நகர்வுகளிலேயே ஒரு தார்மீகக் கறையை ஏற்படுத்தியிருப்பதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது..

முளையிலேயே கிள்ளி எறிந்து..

அதிலும் குறிப்பாக, "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்ற ரஜினியின் அந்த இறுதி வரி, விஜய்க்கு விடுக்கப்பட்ட ஒரு மென்மையான ஆனால் தீர்க்கமான எச்சரிக்கையாகும்..

ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் எடுத்த அதே அரசியல் நிலைப்பாட்டை, இன்று விஜய் கட்சிக்கு எதிராக மறைமுகமாக எடுக்கிறாரோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது..

இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. ரஜினியின் இந்த அறிக்கை, தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது..

தவெக விஜய்

அதுமட்டுமல்ல, என்டிஏ கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என்பது நேற்றுதான் டெல்லியில் உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன.. இந்த விஷயம் நேற்று கன்பார்ம் ஆனதுமே, இன்று ரஜினி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆக, ரஜினிகாந்த் நேரடியாக அரசியலில் இறங்காவிட்டாலும், தனது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களின் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்த்தும் வல்லமை கொண்டவராக உள்ளார்.

விஜய்யின் முழுமையான அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே, அவரைச் சுற்றி ஒரு பெரும் சர்ச்சையை உருவாக்கி, அதற்கு எதிராகப் பெரியதொரு அரசியல் பட்டாளத்தையே களம் இறக்கியிருப்பது, ரஜினிகாந்தின் முதிர்ச்சியான அரசியல் வியூகத்தைக் காட்டுகிறது.. இது 'தமிழக வெற்றிக் கழகத்தை' முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது..

ரஜினியின் இந்தத் திடீர் 'காட்டம்', தவெக தலைவர் விஜய்யை இனி வரும் காலங்களில் இன்னும் கவனமாகச் செயல்படத் தூண்டுமா? குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சி ரீதியான "வாய்ப்பூட்டு" போடப்படுமா? என்பதை வரும் காலம் தான் தீர்மானிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+