மாஸ்க் அணிந்தபடி.. லம்போர்கினி சொகுசு காரை ஓட்டும் ரஜினிகாந்த்.. எங்கே போகிறார்? வைரல் படம்
சென்னை: முகக் கவசம் அணிந்தபடி, ஸ்டீரிங் பிடித்து லம்போர்கினி என்ற சொகுசு காரை நடிகர் ரஜினிகாந்த் ஓட்டி செல்வது போன்ற புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு 'கூஸ்பம்ப்' ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
#LionInLamborghini என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு, டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
இதுதொடர்பாக, ரஜினியின் ஒரே ஒரு படம் மட்டும்தான் இப்போதைக்கு வெளியாகியுள்ளது. ஆனால், அதை வைத்து ஆனந்த கூத்தாடி வருகிறார்கள் அவர் ரசிகர்கள்.

லம்போர்கினி
லம்போர்கினி சொகுசு காரில், டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி ரஜினிகாந்த டிரைவ் செய்கிறார். அவர் முக கவசம் அணிந்து இருப்பதும் தெரிகிறது. பக்கவாட்டில் இருந்து யாரோ இதை கிளிக் செய்துள்ளனர். அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர்தான், இதை கிளிக் செய்து இருக்கக் கூடும் என்று தெரிகிறது.

விளக்கேற்றிய ரஜினிகாந்த்
கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு காலகட்டத்தின்போது, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அப்போது மெழுகுவர்த்தியுடன் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே வந்து நின்றிருந்தார் ரஜினிகாந்த். அதன்பிறகு ஊரடங்கு காலத்தில் எப்போதுமே அவர் வீட்டுக்குள் தான் ஓய்வு எடுத்து வருகிறார்.

அண்ணாத்த ஷூட்டிங்
இயக்குநர், சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வந்தது. ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி சம்பவத்திற்கு பிறகு எப்போதுமே வெளியே வந்தது இல்லை. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வீடியோ மட்டும் வெளியிட்டு இருந்தார்.

எங்கே போகிறார் ரஜினிகாந்த்
இந்த நிலையில்தான் அவர் தற்போது காரில் வெளியே செல்லும் படம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரது ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் பார்த்தால், இந்த கார் ரஜினிகாந்த் மக்களுக்கு சொந்தமானது என்றும், அதைத்தான் ரஜினி எடுத்துக் கொண்டு பண்ணை வீட்டுக்கு செல்வது போலவும் தெரிகிறது. கொரோனா பீதியால், டிரைவரை அவர் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள். சூப்பர் ஸ்டார் வித் சூப்பர் கார் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஊரடங்கு காலம்
இருப்பினும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லாவிட்டாலும்கூட ஊரடங்கு காலத்தில்தான் ரஜினிகாந்த் காரில் வெளியே சென்றிருக்க முடியும் என்பது அவர் அணிந்திருக்கும் முகக் கவசத்தை வைத்து பார்த்தால் தெரிகிறது. ரொம்ப நாளைக்கு பிறகு தனது ஆதர்ச நாயகன் புகைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications