இருவரது செயல்பாடுகள்.. கமல் வேற... ரஜினி வேற.. "நம்மவர்" ஒரு படிமேல
கமலுடன் ரஜினியை அரசியல் கட்சிகள் ஒப்பிட கூடாது
சென்னை: இப்ப எல்லாருக்கும் தெளிவா புரிஞ்சிருக்கும். ரஜினியின் அரசியலுக்கும், கமலின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. எனவே இருவரின் அரசியல் வருகை குறித்த ஒப்பிட்ட விமர்சனங்கள் இனி தேவையற்றதே!!
இங்கே கமலின் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தபோதுதான் ரஜினியின் அமெரிக்க பயண அறிவிப்பும் வெளியானது. கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஒரு வருடம் முடிய போகிறது.
போன வருஷம் டிசம்பர் 31-க்கு அறிவித்தவர், இப்போது அடுத்த வருஷம் டிசம்பர் 31 வரப் போகிறது. கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னதற்கு பிறகு இந்த வருடத்தில் 2.0, காலா என 2 படங்களை ஓட்டிவிட்டார். இப்போது அமெரிக்கா பயணம் முடிந்து திரும்பியவுடன் "பேட்ட" படத்தை ஓட்ட வேண்டும்.

சினிமா விளம்பரங்கள்
ஆக, கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் படங்களுக்கான அடுத்தடுத்த வேலைகள் மட்டும் நடக்கிறது. இப்போது சேனல் தொடங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டார், அது அரசியலுக்கா, தன் சினிமா விளம்பரங்களுக்கா என தெரியவில்லை.

கூட்டணி குழப்பம்?
ஆனால் கமல் ஒவ்வொரு அரசியல் கட்டத்தையும் விறுவிறுப்பாகவும், துணிச்சலாகவும் எடுத்து வைத்து கொண்டு வருகிறார். தேர்தலையும் சந்திக்க போவதாக சொல்லிவிட்டதுடன், யாருடன் கூட்டணி என்பதுவரை அரசியலில் நீண்டு வந்துவிட்டார்.

விமர்சனங்கள்
எனினும் 2 சினிமா ஸ்டார்கள் அரசியலுக்கு வரப்போகிறார்கள் என்பதும் இருவரையுமே நிறைய கட்சிகள் எதிர்த்தன. நடிக்க வழியில்லாமல் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்றும், இருவருமே அரசியலில் தாக்கு பிடிக்க மாட்டார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

கடுப்பில் உள்ளனர்
ஆனால் இதை முற்றிலும் பொய்யாக்கி வருவது கமல் மட்டுமே. 6 கோடி தமிழர்களின் மனதில் இருக்கிறேன் என்று ரஜினி சொன்னாலும் இதுவரை அரசியல் சம்பந்தமான அறிவிப்பு வராமல், அதே 6 கோடி மக்கள் கடுப்படைந்து கிடக்கிறார்கள்.

இறங்குவாரா?
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தாலும் கட்சி ஆரம்பிப்பாரா, அடுத்தக்கட்ட ஷூட்டிங் வேலைகளில் இறங்குவாரா என இன்னும்கூட உறுதியாக தெரியவில்லை. கட்சி தலைவர்களும் சரி, அவர்களது கொள்கைகளும் சரி, எந்தவித சந்தேகத்திற்கும் உட்பட்டதாக மட்டும் இருந்துவிடக்கூடாது.

ஒப்பிடக்கூடாது
அதனால் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லி அறிவித்து ஒரு வருடம் ஆகியும் எந்த வித நடவடிக்கையையும் ரஜினி எடுக்காத நிலையில், வரும் தேர்தலுக்கு தயாராகிவிட்ட கமலுடன் அரசியல் தலைவர்கள் இனி எந்தவிதத்திலும் அவரை ஒப்பிடக்கூடாது... இனி ஒப்பிடவும் முடியாது. இருவரின் அரசியல் ஒவ்வொரு நகர்வையும் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து தான் வருகிறார்கள் என்பதால் இந்த ஒப்பீடு என்பது எந்த தரப்பிலிருந்து வந்தாலும் இனி அது தேவையற்ற ஒன்றாகும்.

அடுத்த எம்ஜிஆர்
இதில் கமல் இன்னும் கொஞ்சம் அதிரடிகளுக்குள் இறங்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை ஆழமாக கையில் எடுக்க வேண்டும். அப்படி மட்டும் இருந்துவிட்டால், 2 விஷயங்கள் தெளிவாகும். நடிகர்கள் அரசியலுக்கு வர தகுதியற்றவர்கள் என்று சொல்பவர்களின் வாயை எளிதாக அடைக்கலாம். இன்னொன்று, அரசியலில் "அடுத்த எம்ஜிஆர்" கமல்தான் என்ற பெயரை மய்ய உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு தமிழக மக்களிடமிருந்தும் எளிதாக தட்டி செல்லலாம்!!
-
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு












Click it and Unblock the Notifications