"ரஜினி அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க?".. எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழகத்து இளம் பிள்ளைகள்!
ரஜினிகாந்த் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
Recommended Video

சென்னை: "ரஜினி அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க?" இப்படித்தான் தங்களுக்காக இன்னும் குரல் கொடுக்க வரவில்லையே என்று தமிழகத்தின் இளம் பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்!
பொள்ளாச்சி சம்பவம் நடந்து மாநிலமே கொந்தளித்து கிடக்கிறது! பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல இருக்கிறது!
ஒருசில காம கழிசடைகளால் இன்றைக்கு நல்ல பசங்களை கூட சந்தேகத்துடன் இளம்பெண்கள் பார்க்க வேண்டிய அவலம் வந்துவிட்டது.

கமல் கேள்வி
ஆளுக்கொரு கட்சி போராட்டம் நடத்துகிறது.. மாணவர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்கள்.. வீட்டில் இருக்கும் பெண்கள் கூட துடைப்பக்கட்டையை எடுத்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய துவங்கி விட்டனர். நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கமல் கேள்வி கேட்டுவிட்டார்! ஆனால் ரஜினி?!

கண்டனக்குரல்
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக ஏன் வாயை திறக்கவே இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுக்கும் பாஜகவுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது என்றுதான் தெரிகிறது. அப்படி இருந்தும் ஏன் கண்டனக் குரல் எழுப்பவில்லை என்றும், ஆளும் தரப்பு செய்து கொண்டிருப்பது எல்லாம் ரஜினிக்கு நியாயமாக தெரிகிறதா என்றும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

ஆதரவு குரல்
அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும், ரஜினியும் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றவர்தானே.. எங்களுக்காக ஏன் ஆதரவு குரல் எழுப்பவில்லை என்று இளம்பெண்களே யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரொம்ப ஷார்ப்
இன்றைய இளைஞர்கள் ரொம்பவும் ஷார்ப்-ஆக இருக்கிறார்கள். எதையும் ஆழமாக யோசிப்பவர்களாகவும் எல்லாவற்றையும் தீவிரமாக சிந்திப்பவர்களாகவும் உள்ளனர். அதனால் ஒவ்வொரு பிரபலங்களையும் உன்னிப்பாக கவனித்து வரவே செய்கின்றனர்.

குறைவுதான்
தமிழகத்தில் எந்த அசம்பாவிதம், இயற்கை சீற்றம், மனித குல பாதிப்புகள் என எது நடந்தாலும் அதற்காக ரஜினி குரல் கொடுப்பது எப்போதுமே குறைவாகவே உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த பொள்ளாச்சி விஷயத்தில் அதி பயங்கரமான ரகசியங்களும், மிக முக்கியமான பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தமிழக மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

தண்ணீர் பிரச்சனை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவாவது, அல்லது அவர்களை காப்பாற்றி வரும் ஒரு சிலருக்கு எதிராகவாவது ரஜினி குரல் கொடுக்கலாமே? இதற்கே குரல் கொடுக்கவில்லை என்றால், "தண்ணி பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொல்ல மட்டும் யாருக்கும் துளி உரிமையும் கிடையாது" என்பது மக்களின் தாழ்மையான கருத்தாக உள்ளது!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications