ரூ. 35 கோடி பிரம்மாண்டம்.. ரஜினி "போயஸ் கார்டன்" இல்லம்.. பார்த்தாலே மிரள வைக்குதே... அம்மாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினாமாவின் உச்சபட்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் வீடு சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த போயஸ் கார்டன் வீட்டின் உள்ளே இருக்கும் அழகியலைப் பற்றிக் கேள்விப்பட்டால் நீங்களே ஒரு நிமிடம் ஷாக் ஆகி போவீங்க.. அது குறித்துப் பார்க்கலாம்

சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு அமைந்திருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.. ஆனால், அதை வெறுமன மற்றொரு பிரபலத்தின் வீடு என்று நம்மால் கடந்து போய்விட முடியாது.

Rajnikanth offbeat Chennai

போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு அவர் கடந்து வந்த பாதை, மக்களிடம் அவர் பெற்ற அன்பு ஆகியவற்றின் ஒரு சான்றாக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் வீடும் அவரை போலவே எளிமையும் அதேநேரம் மாஸும் குறையாமலேயே இருக்கிறது.

ரஜினி வீடு: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தின் வீடு சுமார் ரூ. 35 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.. ரஜினிகாந்த் பல ஆண்டுகளாகத் தனது குடும்பத்தினருடன் இங்கு தான் தங்கி வருகிறார். மேலும், மற்ற பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ரஜினி சந்திப்பதும் இங்கு தான்.. இந்த வீட்டில் நுழைந்தாலே இதன் அழகு நம்மை ஒரு பக்கம் கவரும் அதேநேரம் ஒரு அமைதியும் எளிமையும் கூட நம்மைச் சூழ்ந்துவிடுகிறது.

ரஜினிகாந்த் வீடு நவீன வசதி மற்றும் பாரம்பரியம் என இரண்டின் கலவையாக இருக்கிறது.. அங்குள்ள அனைத்து பொருட்களும் எளிமையாக மினிமலிசத்தை காட்டுவதாகவே இருக்கும். அங்குள்ள பல அலங்கார பொருட்கள் மரங்களால் ஆனதாகவே இருக்கும்.. அவரது வீட்டில் உள்ள கிட்சனும் பாரம்பரிய மற்றும் நவீனத்தின் கலவையாக இருப்பதாகவே அங்குச் சென்று வந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். பாரம்பரியம் மற்றும் அழகியலை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டது போல அது இருக்கிறது.

அழகிய புல்வெளி: ரஜினிகாந்த்தின் இல்லத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அவரது வீட்டைச் சுற்றியிருக்கும் பசுமையான புல்வெளி தான். சரியான அளவு வளர்ந்து இருக்கும் புல்வெளிகள்.. நடந்து செல்ல பாதை என ரிலாக்ஸ் செய்யச் சரியான இடமாக இது இருக்கிறது. கடந்த காலங்களில் அவர் இங்கிருந்து தான் பல செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்.

மற்ற வீடுகள்: பலருக்கும் ரஜினிகாந்த் இல்லம் என்றால் அவரது இந்த போயஸ் கார்டன் குடியிருப்பு தான் நினைவுக்கு வரும். ஆனால், இதைத் தவிர அவருக்கு புனேவில் ஒரு ஆடம்பரமான பங்களாவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.. அது முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், ரஜினிகாந்த்திற்குச் சென்னையில் திருமண மண்டபம் இருப்பதும் அனைவருக்கும் தெரியும். இதற்காகக் கடந்த அக்டோபர் 2020இல் அவர் சொத்து வரியாக மட்டும் ரூ.6.5 லட்சம் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: 73 வயதான போதிலும் ரஜினிகாந்த் இன்னும் தனது டிரேட்மார்க் சுறுசுறுப்புடன் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் கடந்தாண்டு திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. அவரது முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில், அதற்கெல்லாம் சேர்த்து இது மிகப் பெரிய வசூலைப் படைத்துவிட்டது. அப்போது அவர் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+