சவுந்தர்யா திருமணத்திற்கு குடும்பத்தோடு வாங்க.. ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் நேரில் அழைப்பு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இன்று இரவு சுமார் 7 மணியளவில் ரஜினிகாந்த் தனது காரில் அங்கு வருகை தந்தார்.

பின்னர் ஸ்டாலினை சந்தித்து தனது மகள் சௌந்தர்யாவின் திருமண பத்திரிக்கையை வழங்கினார். தொழிலதிபர் விசாகன் வணங்காமுடி என்பவருடன் சௌந்தர்யாவுக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் திருமண வைபோகம் நடைபெறுகிறது.
இதையொட்டி திருமண பத்திரிக்கை ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசரை சந்தித்த ரஜினிகாந்த், மகளின் திருமண பத்திரிக்கையை வழங்கினார்.
திருநாவுக்கரசர் மூலம்தான் தனது மகள் சௌந்தர்யாவின் திருமணம் நிச்சயமானது என்பதால், அவருக்கு முதல் பத்திரிக்கை வழங்கியதாக இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஸ்டாலினை ரஜினிகாந்த் சந்தித்து பத்திரிகை வழங்கினார். ரஜினிகாந்துக்கும் திமுக தலைவராக இருந்த, மறைந்த, கருணாநிதிக்கும் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்த பிறகு திமுகவுடன் சற்று சுணக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இப்போது ஸ்டாலினை, அவரது வீட்டில், சந்தித்து ரஜினிகாந்த் தனது மகள் திருமண பத்திரிகை வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications