நடு ராத்திரி.. வீட்டை நோக்கி ரஜினிகாந்த் கார்.. ஏர் போர்ட்டிலிருந்து.. விடாமல் துரத்தி வந்த இளைஞர்!
ரசிகருடன் ரஜினி போட்டோ எடுத்து கொண்டுள்ளார்
Recommended Video
சென்னை: நடுராத்திரி.. ரஜினியை இளைஞர் ஒருவர் பைக்கில் துரத்தி கொண்டே வந்துள்ளார்.. அவர் வேறு யாருமில்லை.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர் ஆவார்!
நேற்று முன்தினம் இரவு ரஜினி இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அப்போது மணி 12.00க்கு மேல் ஆகிவிட்டது.
ஏர்போர்ட்டில் இருந்து ரஜினி காரில் ஏறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏர்போர்ட்டில் இருந்து பின்னாடியே பைக்கில் ஒருவர் ஃபாலோ பண்ணி கொண்டே வந்தார். ஆனால் தன்னை பைக்கில் ஒருவர் பின்தொடர்ந்து வருகிறார் என்பதை ரஜினி கவனிக்கவில்லை.

தீவிர ரசிகர்
அதனால், கார் போயஸ் கார்டனுக்கே வந்துவிட்டது. வீட்டுக்கு வந்ததும்தான் பைக்கில் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததை ரஜினி கவனித்தார். அவர் தீவிர ரசிகர் என்று தெரிந்து விட்டது. எனினும் வீட்டிற்குள் சென்றுவிட்டார் ரஜினி. அடுத்த ஒருசில செகண்டில் ரஜினி வீட்டு வாட்ச்மேன் ஓடிவந்து, "உங்களை சார் கூப்பிடுகிறார்" என்று சொல்லவும் குப்பென வியர்த்து விட்டது இளைஞருக்கு.

கண்டிப்பு
அதனால் பயந்தபடியே வீட்டுக்குள் சென்றார் ரசிகர். உடனே ரஜினியும் ரசிகரின் விருப்பப்படியே ஒரு போட்டோ எடுத்து கொண்டார். பிறகு, இப்படியெல்லாம் உயிரை பணயம் வைத்து பைக் ஓட்டக் கூடாது கண்ணா.. இப்படி காரையும் ஃபாலோ செய்யக்கூடாது என்று உரிமையாக கண்டித்தார்.

சாரி தலைவா
அதற்கு ரசிகரும், "ஸாரி தலைவா.. இனிமேல் செய்ய மாட்டேன்" என்று சொல்லி வெளியே வந்தார். இந்த ரசிகரின் நண்பர் இந்த செய்தியை தனது பேஸ்பக்கிலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏராளமானோர் லைக் செய்து வருகிறார்கள்.

சபாஷ் ரஜினி
ஒரு உச்ச நடிகர்.. நடுராத்திரி.. ஒரு ரசிகனை வீட்டுக்குள்ளே அழைத்து உபசரித்து.. போட்டோ எடுத்து.. அட்வைசும் தந்து அனுப்பி உள்ளது ரஜினி என்ற நல்ல மனிதனின் குணத்தைதான் காட்டுகிறது. இது போல நடிகர் அஜித்தும் பலமுறை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுடன் போட்டோ எடுத்து அவர்களை செல்லமாக கண்டித்தும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications