தமிழ்நாட்டில் 6 எம்.பிக்களை தேர்வு செய்ய மார்ச் 16ல் ராஜ்யசபா தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா, கனிமொழி சோமு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட 6 பேரின் பதவிகாலம் நிறைவடைகிறது. இதையொட்டி, 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்கள் காலியாகின்றன. இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு செய்ய மாநிலங்களவை தேர்தல் வரும் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - மார்ச் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9. போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.
இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.












Click it and Unblock the Notifications