Kamal Haasan: ராஜ்யசபா எம்பியான கமல்ஹாசனுக்கு மாத சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
சென்னை: மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவருடைய மாத சம்பளம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

காலியாக இருந்த 6 இடங்களுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 4 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம். அந்த வகையில் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டது.
அந்த ஒரு சீட்டுக்கு கமல்ஹாசன் போட்டியிட்டார். அது போல் மற்ற இடங்களுக்கு ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம், பி. வில்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 பேரும் கடந்த 25 ஆம் தேதி பதவியேற்றனர்.
கமல் தனது உறுதிமொழி வாசிப்பில் "மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்" எனத் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கிடைக்க போகும் சலுகைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அவருடைய மாத சம்பளம் ரூ 1.24 லட்சம் ஆகும். நாடாளுமன்ற வருகை நாட்களில் தினசரி படியாக ரூ 2500 கிடைக்கும். அலுவலக பராமரிப்பு மற்றும் உதவியாளர் சம்பளம் ரூ 70 ஆயிரம் ஆகும். இலவச தொலைபேசி மற்றும் இணைய வசதி வழங்கப்படும்.
பதவி காலத்தில் டெல்லியில் இலவச வீடு அல்லது விடுதி வசதி வழங்கப்படும். சீனியாரிட்டி அடிப்படையில் பங்களா வீடு கிடைக்கும். இலவச மருத்துவச் சேவை கிடைக்கும். அது போல் எம்பிக்கள், அவர்களது குடும்பத்தினருடன் ஆண்டுக்கு 34 இலவச உள்நாட்டு விமான பயணங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வூதியமாக ரூ 31 ஆயிரம் வழங்கப்படும். தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணமாக எப்போது வேண்டுமானாலும் முதல் வகுப்பு ரயில் பயணம் மேற்கொள்ளலாம். அது போல் ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். எம்பிக்களின் சாலை பயண செலவை அரசே ஏற்கும். இத்தனை சலுகைகள் ராஜ்யசபா எம்பியாகியுள்ள கமல்ஹாசனுக்கு கிடைக்கும்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications