இதெல்லாம் ரொம்ப தப்புங்க..திமுக -அதிமுகவுக்கு பெரிய சிக்கல்! டெல்லிக்கு அடிபோடும் கூட்டணி கட்சிகள்
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை குறிவைக்கும் கூட்டணிக் கட்சிகளால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் புதிய சவால் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள வேளையில், தேமுதிக, பாமக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவை எம்பி பதவியை முக்கிய ஆயுதமாகக் கொண்டு தங்களது அரசியல் அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை யாருக்கு வழங்குவது என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு ஆகியோரின் பதவிக் காலமும், அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தல்
சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை அடிப்படையாகக் கொண்டால், இந்த ஆறு இடங்களில் நான்கு இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைப்பது உறுதியானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த கணக்கு எளிமையானதாக இருந்தாலும், கூட்டணி அரசியல் அதை சிக்கலாக்கியுள்ளது. காரணம், இந்த இடங்களை தங்களுக்காக ஒதுக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளே. அதிமுக தரப்பில், பாமக தலைவர் அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவை சீட் அரசியல்
இதனால் அதிமுகவுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களில் ஒன்றே மீதமிருக்கும் நிலையில், அந்த ஒரே இடத்தை இன்னும் யாருக்கு வழங்குவது என்ற குழப்பம் உருவாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் தங்களுக்கும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், "கூட்டணிக்கு வரவேண்டும் என்றால் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி வழங்க வேண்டும்" என்ற தெளிவான நிபந்தனையுடன் அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி அழுத்தம்
இதனால், அதிமுக தலைமையிடம் இடப் பங்கீடு தொடர்பான அழுத்தம் அதிகரித்துள்ளது. மறுபுறம், திமுக தரப்பிலும் நிலைமை சிக்கலாக தான் உள்ளது. திமுகவுக்குக் கிடைக்கவுள்ள நான்கு மாநிலங்களவை இடங்களை யாருக்கு வழங்குவது என்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மாநிலங்களவை பதவியை குறிவைத்து வருகின்றன. இதனுடன், பாமக நிறுவனர் ராமதாஸ் அல்லது தேமுதிக திமுக அணிக்கு வந்தால், அவர்களுக்கும் தலா ஒரு இடம் வழங்கப்படலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
திமுக கூட்டணி சிக்கல்
ஒருபுறம் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு, மறுபுறம் மாநிலங்களவை இடங்களுக்கான பங்கீடு என இரட்டை அழுத்தத்தை திமுகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகின்றன. சட்டமன்ற தொகுதி வேண்டும், மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என்ற கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள், இரண்டு பிரதான கட்சிகளையும் முடிவெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது.
மாநிலங்களவை தேர்தல்
இதனால், மாநிலங்களவை தேர்தல் என்பது இனி வெறும் மேலவை பதவிக்கான போட்டியாக இல்லாமல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அரசியலை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். யாருக்கு இடம் கிடைக்கும், யார் கூட்டணியில் இருந்து விலகுவர் என்பதுதான், வரும் மாதங்களில் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications