3 ப்ராப்ளம்.. எடப்பாடிக்கு பிரச்சனை தீரலையே! வரிந்து கட்டி நிற்கும் தலைகள்..ராஜ்யசபா சீட் சிக்கல்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் அதிமுக சிக்கலை எதிர் கொண்டிருக்கும் நிலையில் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நெருக்கடியை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருப்பவர்களும் கூட்டணி கட்சிகளும் மாநிலங்களவை சீட்டை கேட்பதால் எடப்பாடிக்கு புதிதாக மூன்று சிக்கல்கள் உருவாகி இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் அங்கு இருக்கும் கட்சிகளின் பிரதான கோரிக்கையாக மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு கோரிக்கை தான் இருக்கிறது.
ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, என் ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, அதிமுக கூட்டணியில் இருந்த ஜிகே வாசனின் பதவி காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.

மாநிலங்களவை தேர்தல்
இந்த பதவிகளை நிரப்புவதற்கு தான் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களை பலத்தின் படி நான்கு மாநிலங்களவை எம்பிக்கள் திமுகவுக்கு கிடைப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவின்படி அந்த நாலு சீட்டுகளும் சிக்கலின்றி நிரப்பப்படும். தற்போது இருப்பவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் என்கின்றனர் திமுகவினர். அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை கூட்டங்கள் இருக்கும் ஜிகே வாசனின் பதவிகள் காலியாகும் நிலையில் மீண்டும் எம்பி சீட்டை எதிர்பார்க்கிறார் தம்பிதுரை. அதிமுகவின் டெல்லி குரலாக ஒலிக்கும் அவரை மீண்டும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம். மீதம் ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு இருக்கும் நிலையில் அதற்கு மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணி
கடந்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதும் அதே வாக்குறுதியோடு கூட்டணியில் இணைந்திருக்கிறார் அன்புமணி. இதனால் ஒரு சீட்டு பாமகவுக்கு சென்று விடும். இதற்கிடையே அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்றால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர வேண்டும் என தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக இருக்கிறார்.
சீட் பிரச்சனை
அதனை மறுக்கவும் முடியாமல் கொடுக்கவும் முடியாமல் சிக்கலில் இருக்கிறது எடப்பாடி தரப்பு. எம பி சீட் கொடுத்தால் தான் கூட்டணி என தேமுதிக சொல்லிவிட்ட நிலையில் தம்பிதுரை சீட்டை காலி செய்யலாமா என எடப்பாடி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவதாக ஜிகே வாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டாலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தான் ஜிகே வாசன் மாநிலங்களவை எம்பி ஆக்கப்பட்டார்.
தமிழக அரசியல்
தற்போது அதே கோரிக்கையை வாசன் எழுப்புவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு மூன்று பேர் போட்டி போடும் நிலையில் கூடுதலாக ஜிகே வாசனும் சண்டைக்கு வருவதால் எடப்பாடி பழனிச்சாமி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தல் முடிந்தால் கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிடலாம். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் காத்திருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications