கூரைய பிச்சுகிட்டு கொட்டிய அதிர்ஷ்டம்..பிரியங்காவை கலாய்த்த பூவையார்! இப்போ வேற லெவலுக்கு போயாச்சு!
சென்னை: மிக எளிய பின்னணியில் இருந்து வந்த பூவையார் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். குறிப்பாக பிரியங்காவை கலாய்த்து பேசிய வீடியோக்கள் இன்று வரை பலருக்கு ஃபேவரைட். இந்த நிலையில் விஜயுடன் மாஸ்டர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பூவையார் தற்போது நாயகன் அவதாரம் எடுத்திருக்கிறார். இதனையடுத்து பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு நாயகர்களும் நடிகர்களும் வருவது புதிதல்ல. காமெடியன்கள் தொடங்கி ஹீரோக்கள் வரை தற்போது சினிமாவில் கலக்கும் பெரும்பாலானோர் சின்னத் திரையில் இருந்து வந்தவர்கள் தான்.
குறிப்பாக பிரபலமான விஜய் டிவியில் இருந்து ஏராளமானோர் பெரிய திரையில் கலக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, ரோபோ சங்கர், மாகாபா ஆனந்த் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அப்படி விஜய் டிவி மூலம் பெரிய திரைக்கு அடி எடுத்து வைத்தவர் தான் பூவையார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடகராக மிக எளிய பின்னணியில் இருந்து வந்து கலந்து கொண்டவர். கப்பீஸ் என்ற பெயரோடு அந்த நிகழ்ச்சியில் கலக்கியவர். குறிப்பாக பிரியங்காவை கலாய்த்து பேசும் பூவையாரின் வீடியோக்கள் இன்று வரை பலரது ஃபேவரைட். தொடர்ந்து அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பில் சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
முதன்முதலாக விஜய்யுடன் பிகில் படத்தில் பாடியதோடு, அந்த பாடலுக்கு விஜயுடன் நடனம் ஆடினார் பூவையார். அதற்கு பிறகு மாஸ்டர் படத்தில் முக்கியமான கேரக்டர் பூவையாருக்கு கிடைத்தது. தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மகாராஜா, பிரசாந்துடன் அந்தகன் படத்திலும் நடித்தார். பின்னர் சில படங்களில் தலைகாட்டிய நிலையில், அதற்கு பிறகு அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. தற்போது திடீர் அதிர்ஷ்டமாக ஒரு படத்தின் நாயகனாக நடித்து வரும் தகவல் தற்போது வெளியாகி வருகிறது. இதை அடுத்து பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தில் தான் அவர் ஹீரோவாக நடிக்கிறார் பூவையார். தவறான பாதைக்குச் செல்லும் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தை ஜெயவேல் இயக்குகிறார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோ சார்பில் கிளமெண்ட் சுரேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜய் அர்னால்டு, வேல. ராமமூர்த்தி, அர்ஜுன், தலைவாசல் விஜய், சாய் தீனா, சாம்ஸ், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கிருஷ்ண சேத்தன் இசையமைக்க எல்கே விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டமாக நடைபெற்று வரும் நிலையில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications