அய்யாவை நான் பார்க்கலையா? இதுலையுமா அரசியல்.. கொச்சைப்படுத்தாதீங்க! வேதனையுடன் பேசிய அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தந்தை மகன் உறவை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும், தான் மருத்துவர் ராமதாசை நேரில் சென்று சந்திக்கவில்லை என பேசி அரசியல் செய்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முழுமையான இதய பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் ஆஞ்சியோகிராம் சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில், ராமதாஸின் ரத்தக் குழாய்களில் எந்தவிதமான அடைப்பும் இல்லை என்றும் அவர் நலமாக உள்ளார் என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.

Anbumani Ramadoss Ramadoss PMK

ராமதாஸ் உடல்நிலை

இதற்கிடையே, மருத்துவமனையில் அவரை பார்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் சென்றனர். அனைவரும் அவரது உடல்நிலையை விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்தினர். இந்நிலையில், ராமதாஸின் மகனும், பாமக தலைவர் அன்புமணியும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ராமதாஸ் நலம்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அப்பா ஐசியூவில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை" என்று கூறியிருந்தார். நிலையில், சில நிமிடங்களுக்குப் பிறகு ஜி.கே. மணி வெளியிட்ட வீடியோவில் ராமதாஸ் வார்டில் பேசுவது போல் இருந்தது விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிவடைந்த நிலையில், ராமதாஸ் நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ராமதாஸ்

வெளியேறும் போது செய்தியாளர்கள், "மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனரா?" என்று கேட்டனர். அதற்கு ராமதாஸ், "எனக்கு ஓய்வே கிடையாது" என பதில் அளித்து செண்டார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

தந்தை மகன் உறவு

இந்த நிலையில் தந்தை மகன் உறவை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும், தான் மருத்துவர் ராமதாசை நேரில் சென்று சந்திக்கவில்லை என பேசி அரசியல் செய்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," அப்பல்லோ மருத்துவமனையில் நார்மல் செக்கப்பிற்காக அய்யா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலைபழைய நிலையில் தான் உள்ளது. ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார். அவரை நான் பார்க்காததை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதுபோன்று பேசி கொச்சைபடுத்த வேண்டாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+