அந்த பதவியை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது.. லியோனி நியமனத்திற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை : தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக அரசு அண்மையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருந்தஅறிக்கையில், ''தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் திறம்பட மேற்கொண்டு வருகின்றது.

பாட நூல்கள்
1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாட நூல்களை மீட்டுருவாக்கம் செய்து, இணையத்தில் கொண்டுவரும் ஐந்தாண்டுத் திட்டத்தை 2017-ல் இருந்து இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதோடு, மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

லியோனி நியமனம்
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது பணிகளைச் செம்மையாகத் தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி, சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது'' இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

மோசமானது
இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லியோனி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்

ஒன்றிய அரசு
பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியில் இருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாஜகவினரும் லியோனி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே திண்டுக்கல் ஐ லியோனி மத்திய அரசு என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்ற வார்த்தைகள் தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications