பரபரப்பை கிளப்பிய ராமதாஸ்.. பாமகவிற்கு களத்தில் பாஜகதான் எதிரியாம்! அப்போ 2024ல் அவங்களுடன் கூட்டணி?
சென்னை: பாஜகவில் இளைஞர்கள் இணையக் கூடாது என்றும் அவர்களை தடுக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நிறுவனர் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
திமுக கூட்டணியில் பாமக 5 இடங்களில் போட்டியிட்டது. அந்த 5 தொகுதிகளிலும் பாமக வென்றது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட அந்த 5 பேரில் ஒருவர் அன்புமணி ராமதாஸ். இவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார்.

108 ஆம்புலன்ஸ்
அப்போது அவர் கொண்டு வந்ததுதான் இன்று வரை உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் திட்டம். சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றது. மதுவுக்கு எதிரான முன்னெடுப்புகள், போலியோவை ஒழித்தது போன்ற நல்ல பல சாதனைகளை அன்புமணி புரிந்துள்ளார்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியை முறித்துக் கொண்ட பாமக இதன் பிறகு மக்கள் நல கூட்டணி, அதிமுக ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. தற்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 5 எம்பிக்களையாவது பாமக சார்பில் அனுப்பி வைக்க பாமக தன் பணிகளை இப்போதே தொடங்கியுள்ளது.

பாமக 2.0
இதற்காக பாமக 2.0 என்ற செயல்திட்டத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டுள்ளார். அது போல் 2026 ஆம் ஆண்டு கோட்டையை பிடிக்கவும் பாமக திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியை பலப்படுத்தும் வகையில் ராமதாஸ் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ராமதாஸ் பேச்சு
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், பாமகவை பொறுத்தவரை களத்தில் பாஜகதான் எதிரி. பாமகவில் இருந்தோ வன்னியர் சங்கத்தில் இருந்தோ வேறு கட்சிகளுக்கு சென்றால் கூட ஒரு நாள் பாமகவை நோக்கி வந்து விடுவார்கள் என நம்பிவிடலாம். ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக என்பது ஒழிவழிப்பாதையாகும்.

இளைஞர்கள்
இந்த கட்சிகளுக்கு இளைஞர்கள் சென்றால் திரும்பமாட்டார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகளும் இளைஞர்களை ஈர்த்து வருகிறது. இதனாலும் இளைஞர்கள் பாஜகவில் சேருகிறார்கள். எனவே வன்னியர் சங்கமும் பாமகவும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர் எஸ் எஸ் பாஜகவில் சேருவதை தடுக்க வேண்டும். இளைஞர்கள் நம்மிடத்தில் தக்க வைக்கவும் நம் கட்சியில் சேருவதற்கும் தேவையான பணிகள் பாமக நிர்வாகிகள் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காட்டம்
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜக அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில்தான் பாமகவும் இருந்தது. மேலும் அதிமுகவால் மாநிலங்களவைக்கு சென்ற அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர் பதவியை பெற முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாஜக குறித்து ராமதாஸ் காட்டாமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமக வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தோ இல்லை தனித்தோ போட்டியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 2026 ஆம் ஆண்டு பாமக ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருவதால் அக்கட்சியின் தலைமையில் பிற கட்சிகளை இணைத்து கொள்ளும் என தெரிகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications