“படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்”.. விபி சிங் குரலாக நான் - தமிழக அரசை விளாசிய ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும் என்றும், இல்லையேல் மன்னிக்காது எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 15 ஆம் நினைவு நாளான வரும் 27 ஆம் நாள் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை தமிழக அரசின் சார்பில் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 20 ஆம் நாள் தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட போதே அதை நான் வரவேற்றேன். இப்போதும் வரவேற்கிறேன்.

Ramadoss said that he is voice of VP Singh demand castewise survey

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமது உருவச்சிலை அமைக்கப்படுவதை உணர முடிந்தால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட 100 மடங்கு கூடுதல் மகிழ்ச்சியை, தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருந்தால், வி.பி.சிங் அடைந்திருப்பார்.

ஒருபுறம் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் உருவச்சிலையை திறந்து கொண்டு, இன்னொருபுறம் மாநில அரசின் சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று தமிழக அரசு கூறுவது ''படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் தான் அமையும். வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டி இருப்பார்.

அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். வி.பி.சிங் அவர்களின் குரலைத் தான் நான் ஒலித்துக் கொண்டிருக்கிறேன். சமூக நீதியின் அடிப்படைகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் இப்போதாவது புரிந்து கொண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளை விட சிறந்த தருணம் இருக்க முடியாது. எனவே, வி.பி.சிங் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், அதற்காக முதலமைச்சரை வி.பி.சிங் அவர்களின் ஆன்மா வாழ்த்தும்; இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு பெருந்துரோகம் செய்தவர்களை மன்னிக்காது!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+