முரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமையகம் முரசொலி, பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், வெளியான அசுரன் திரைப்படத்தை, தியேட்டரில் கண்டு ரசித்தார், திமுக தலைவர் ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல.. பாடம் என்று தெரிவித்தார்.

Ramadoss says DMK head office Murasoli located on panchami land

இந்த நிலையில், ஸ்டாலினை ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ராமதாஸ் ட்வீட்டை பாருங்கள்.

பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

இதேபோல மேலும் சில ட்வீட்டும் வெளியிட்டுள்ளார். அதையும் பாருங்களேன்.

காவல்துறையினரின் தேவைகளை அறிந்து தீர்க்கவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. விரைவாக பரிந்துரைகளை பெற்று செயல்படுத்தி, காவல்துறையினரின் மன அழுத்தங்களைப் போக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், கடந்த காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, புறநகர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிப்புகளைத் தடுக்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+