1.20 லட்சம் இடங்களுக்கு 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்! அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் -பாமக
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

அரசுக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.98 லட்சம் விண்ணப்பங்கள் தகுதியானவை. கடந்த ஆண்டை விட கூடுதலாக 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

என்ன காரணம்?
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை. அவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருப்பதும் தான் விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் ஆகும்.

இடம் மறுக்கக்கூடாது
பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தீர்வல்ல.

மாணவர் சேர்க்கை
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications