"பார்த்துக்கொள்ள துப்பு இல்லை.. மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி பேச மாட்டான்".. ராமதாஸ் காட்டம்
சென்னை: "அய்யாவுக்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன்" என அன்புமணி பேசியதற்கு ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். "மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை, அது இன்று முற்றிப்போய்விட்டது" என என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது மருத்துவமனைக்குச் சென்ற பாமக தலைவர் அன்புமணி, ராமதாஸ் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை, ராமதாஸ் நலமாக உள்ளார் எனத் தெரிவித்தார். அதேசமயம், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையடுத்து கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, "அய்யாவுடைய செக்கப் சென்றதை சில பேர் தொடர்பு கொண்டு அய்யாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க என வலியுறுத்தியுள்ளார்கள்.. இதெல்லாம் என்ன அசிங்கமா இருக்கு, அய்யாவிற்கு 87 வயது காலில் ஆஞ்சியோ செய்துள்ளார்கள், யார் யாரோ வந்து பார்க்கிறார்கள் இது என்ன எக்சிபிசனா? நான் இருக்கும் போது காரிடர் கூட வர மாட்டாங்க, தூங்க விட மாட்றாங்க, அய்யாவிற்கு ஏதாவது ஆனா தொலைச்சி போட்டுருவேன் சும்மா விட மாட்டேன், கோபத்தில் இருக்கேன்.. அய்யாவை வைத்து டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா" என ஆவேசமாக பேசினார்.
இதனையடுத்து சிகிச்சை முடிந்து ராமதாஸ் நலமுடன் டிஸ்டார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், "அய்யாவுக்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன்" என அன்புமணி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
"மருத்துவர் ஐயா நல்லா இருக்கிறார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். இது திட்டமிட்டது தான். ஒரு வாரத்திற்கு முன் இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து நல்லா இருக்கிறார். ஆனால், அவருடன் இருக்கும் சில பேர், அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை, வந்து பாருங்க என்று சொல்வதெல்லாம் அசிங்கமாக இருக்கிறது. அய்யாவை வைத்து நாடகமாடிட்டு இருக்காணுங்க,' என்று எல்லாம் அன்புமணி பேசினார்.
அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை.. படிக்காத, மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை, அது இன்று முற்றிப்போய்விட்டது.நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை." என என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "மருத்துவமனையில் நான் ஐசியு வார்டுக்கு செல்லவில்லை. அரசியல் பாகுபாடு இன்றி பலர் என்னிடம் நலம் விசாரித்தனர். மருத்துவமனையில் இருந்தபோது என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி" எனத் தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications