முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்த ராமதாஸ்.. பேசியது என்ன? அவரே கொடுத்த விளக்கம்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். முதல்வர் ஸ்டாலினை இன்று தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் ராமதாஸ்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசினர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த ஜூலை 21 ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார்.
பின்னர் உடல் நலம் தேறிய நிலையில் கடந்த 27 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் அதன் பிறகு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். 10 நாட்களுக்குப் பிறகு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்து தனது அலுவல் பணிகளை தொடங்கினார்.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சந்தித்து பேசினர். நேற்று காலை அடையாறு பகுதியில் நடைபயிற்சி சென்றபோது, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், நேற்று மாலையில் மீண்டும் முதல்வரின் இல்லத்திற்கு சென்று பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரேமலதாதமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி தொடர்பாக, அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸும், மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ராமதாஸிடம் கேட்டதற்கு, முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார் ராமதாஸ்.
ராமதாஸ் பேசுகையில், "தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். அவர் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்." எனத் தெரிவித்தார்.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications