தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி.. யார் பார்த்த வேலை இது.. டாக்டர் ராமதாஸ் அடுத்த அதிரடி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், அன்புமணி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார் ராமதாஸ். இந்நிலையில் தன் வீட்டில் 'பக்' வைத்து ஒட்டுக் கேட்பதாக கூறி அதிர வைத்த நிலையில், தற்போது தனது சமூக வலைதள கணக்கை மீட்டுத் தர வேண்டுமென டிஜிபிக்கு புகார் அனுப்பியுள்ளார் ராமதாஸ்.
நாளுக்கு நாள் பாமகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் வலுத்துக் கொண்டே போகிறது. தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்சி இரண்டாக உடைபட்டது போல வந்து நிற்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கினார் ராமதாஸ்.
தொடர்ந்து கட்சியில் நிர்வாகிகள் நியமனம், தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் ஆகியவற்றை அன்புமணியே எடுத்து வந்தார். இந்த நிலையில் கட்சியில் நடந்த சில விவகாரங்கள் ராமதாஸுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதை அடுத்து அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதும் அன்புமணி ராமதாஸ் விழா குழுவுக்கு தலைமை ஏற்று இருந்த வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. ஆனாலும் அதிலும் ராமதாஸ் அன்புமணி ராமதாஸை குறி வைத்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை மகன் இடையே மோதல் இருப்பது வெட்ட வெளிச்சமான நிலையில் பலரும் அன்புமணி பின்னால் திரண்டனர்.
ராமதாஸ் நடத்திய கூட்டத்தையே புறக்கணிக்கும் அளவுக்கு நிர்வாகிகளின் செயல்பாடு இருந்தது. இதை அடுத்து கட்சியில் தனது செல்வாக்கு குறைகிறது என நினைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு நீக்கியதோடு முன்னாள் நிர்வாகிகளை அந்த பதவிகளில் அமர்த்தினார். இதற்கு இடையே அன்புமணி தற்போது மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இப்படி தந்தை மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் தலையீடு கோரி ராமதாஸ், அன்புமணி டெல்லி தரப்பை அணுகி இருக்கின்றனர். கட்சியின் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தான் தலைவர் என அன்புமணி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்திருக்கும் நிலையில் அன்புமணி தலைவர் இல்லை அவரது பதவி காலம் நிறைவடைந்து விட்டது என ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.
இதற்கிடையே கும்பகோணத்தில் பாமக ஆலோசனை கூட்டத்தை கூட்டிய ராமதாஸ், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாதும் இன்சியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியது தொண்டர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவியை பொருத்தி சிலர் தனது பேச்சுக்களை ஒட்டு கேட்பதாக கூறி அதிர வைத்தார் ராமதாஸ்.
இது தொடர்பாக இன்று அவரது வீட்டில் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களிடம் இருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டு தர வேண்டும் என ராமதாஸ் தமிழக டிஜிபிக்கு புகார் மனு அனுப்பியதாக கூறப்படுகிறது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளம் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் பராமரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டு இருப்பதாகவும் அதனை மீட்டெடுத்து தர வேண்டும் என கூறி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications