ராமதாஸ் 3ம் அணிக்கு உயிர் கொடுக்கிறாரா? திராவிட கோட்டைகளை அசைக்க பழைய கணக்கு, புதிய கூட்டணி
சென்னை: தமிழக அரசியல் களத்தில் மாற்றத்திற்கான அதிர்வுகள் இப்போதே கிளம்ப தொடங்கிவிட்டன... பொதுவாக தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான், கூட்டணி கணக்குகள் சூடுபிடிக்கும். ஆனால், இந்த முறை புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையானது, கூட்டணி கட்டமைப்பையே அசைத்து பார்க்கத் தொடங்கியுள்ளது... இதில் மூத்த தலைவர் ராமதாஸும் சிக்குண்டு போய்விட்டாரோ? என்றே கணிக்க தோன்றுகிறது...!!
பாமகவில் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அன்புமணி, அதிமுக, பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ளார். இதனால், ராமதாஸ் தரப்புக்கு அந்த கூட்டணியில் சேரும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

பாமக ராமதாஸ் - அன்புமணி
இதனைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வாய்ப்பும் கைநழுவியது.
இந்த பின்னணியில், ராமதாஸ் தரப்பு தற்போது மாற்று அரசியல் பாதையை தேடி வருகிறது. அந்த வகையில், விஜய் தலைமையிலான தவெக ஒரு முக்கிய சாய்ஸாக பார்க்கப்படுகிறது.
தவெக விஜய்
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி ஒரு மென்மையான அணுகுமுறையை கையாள தொடங்கியிருப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் பெரும் ஆதரவு, அவரை அரசியல் ரீதியாக வலுவான தலைவராக மாற்றியுள்ளது... அதேசமயம், வடமாவட்டங்களில் பாமக வைத்துள்ள வாக்கு வங்கி இன்னும் கணிசமான அளவில் உள்ளது. இந்த இரண்டு சக்திகள் இணைந்தால், அது அரசியல் மேடையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே ராமதாஸ் தரப்பின் கணக்காக உள்ளதாம்..
சேலம் பாமக அருள்
இதற்கு வலு சேர்க்கும் விதமாக, தவெக தரப்பில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த தகவல்களும், அதற்குப் பாமக தரப்பில் இருந்து வந்துள்ள பதில்களும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன...
சேலத்தில் பாமகவின் அருள் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் நேற்று பேசியதில் இருந்தே, அந்த கட்சியின் மனநிலையை தெளிவாக பிரதிபலிக்கிறது. "அரசியலில் பேச்சுவார்த்தைகள் நடப்பது இயல்புதான்" என்று அவர் மிக இயல்பாக குறிப்பிட்டதுடன், விஜய்யைச் சுற்றி இருக்கும் இளைஞர்களின் உத்வேகத்தை பாராட்டியதும் இங்கு நாம் கவனிக்கத்தக்கது.
வெளியான சமிக்ஞை
மாற்று அரசியலை முன்வைக்கும் எந்தவொரு புதிய கட்சிக்கும், நீண்டகால அனுபவம் கொண்ட பாமக போன்ற ஒரு கட்சியின் ஆதரவு கிடைப்பது மிகப்பெரிய பலமாகும்.
அதுபோலவே, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தி உருவாக வேண்டும் என்ற பாமகவின் நீண்டகால விருப்பத்திற்கு விஜய்யின் வருகை ஒரு பாலமாக அமையலாம் என அவர்கள் கருதுவதாக தெரிகிறது.
"விஜய் முதலமைச்சரானால் அதில் தவறில்லை" என்ற அருள் எம்.எல்.ஏ-வின் வார்த்தைகள் வெறும் பாராட்டு மட்டுமல்ல, அது தமிழக அரசியலின் அடுத்தகட்டப் பயணத்திற்கான ஒரு சமிக்ஞையாகவும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
ராமதாஸ் - புதிய வியூகம்
ஒருவேளை இந்த கூட்டணி சாத்தியமானால், பாமகவில் அன்புமணி அணிக்கு எதிரான ஒரு வலுவான அரசியல் தளத்தை ராமதாஸ் உருவாக்க முடியும். இரண்டாவதாக, திமுக கூட்டணியில் விசிகவையும் வீழ்த்த முடியும், அதிமுக, பாஜக கூட்டணிக்கும் இது ஒரு புதிய அரசியல் போட்டியாக அமையும் என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் தரப்பு கணக்கு போடுவதாக தெரிகிறது..
இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொல்லி உள்ளதால், தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் வலிமையான கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றன. இது வெறும் தேர்தல் உடன்படிக்கையாக இருக்குமா அல்லது ஒரு நீண்டகால அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்குமா தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்ப்போம்..!!
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications