திமுக கூட்டணியில்.. ராமதாஸ் தரப்புக்கு 5 சீட்.. அன்புமணிக்கு எதிராக பக்கா ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின்!
சென்னை: பாமகவின் ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளுடன் திமுக தரப்பு நெருக்கமாகிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால், 5 சீட்கள் வரை ஒதுக்கப்படும் என்றும் சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த அன்புமணி கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்திலேயே தொடர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வரும் சூழலில், இன்னும் 4 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதனிடையே இரு தரப்பும் மாம்பழ சின்னத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.

அதேபோல் அன்புமணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டார். ஆனால் ராமதாஸ் தரப்பை எப்படி சமாளிப்பது என்பதே அதிமுக மற்றும் பாஜகவின் தலைவலியாக மாறியுள்ளது. ஏனென்றால் அன்புமணி உடனான மோதலை பயன்படுத்தி திமுக தரப்பு ராமதாஸ் உடன் நெருங்கிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
விஜய்யின் எழுச்சி காரணமாக திமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். அந்த வகையில் வட மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய ராமதாஸ் தரப்பு ஆதரவு தேவையாக இருக்கிறது. இதற்கு விஜய்யின் வருகையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை திமுக கூட்டணிக்கு வர ராமதாஸ் ஒப்புதல் கொடுத்தால், அவர் தரப்புக்கு 5 சீட் வரை ஒதுக்கலாம் என்று ஸ்டாலின் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனால் ராமதாஸ் ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் திமுக நிர்வாகிகள் இருந்து வருகின்றனர். அதேபோல் திமுக கூட்டணியில் இணைந்தால், அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் ராமதாஸை பயன்படுத்தலாம் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனையறிந்து அன்புமணி கடும் டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ராமதாஸ் தரப்பு திமுக பக்கம் சாய்ந்தால், அதிமுக கூட்டணியில் உள்ள அன்புமணிக்கு தொகுதிகள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் மாம்பழ சின்னத்திற்காக ராமதாஸ் நீதிமன்றப் படிகள் ஏறினால், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் அன்புமணியின் என்ன செய்யப் போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications