யாருடன் கூட்டணி? டிசம்பர் 29ல் ராமதாஸ் வெளியிடப்போகும் அறிவிப்பு.. ஜிகே மணி கொடுத்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் 29ஆம் தேதி பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஜிகே மணி தெரிவித்துள்ளார். அதேபோல் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்றும் ஜிகே மணி கூறியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. இரு தரப்புமே தாங்கள் தான் உண்மையான பாமக என்று கூறி வரும் சூழலில், இரு தரப்பும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஏற்கனவே அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. கடந்த முறை 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, இம்முறை 30 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது.

Ramadoss vs Anbumani

அதேபோல் ராமதாஸ் தரப்பை திமுக பக்கம் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. எவ வேலு மூலமாக திமுக தலைமை பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஜிகே மணி உள்ளிட்டோர் மூலமாக ராமதாஸை ஒப்புக் கொள்ள முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை கூட்டணி தொடர்பாக இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் பாமக ராமதாஸ் தரப்பு செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராமதாஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அன்புமணி தரப்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளது.

இந்த நிலையில் பாமக நிர்வாகி ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.

2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ராமதாஸின் முடிவுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸை கொச்சைப்படுத்தீர்கள். இதனால் ராமதாஸ் கண் கலங்குகிறார்.. இன்னொரும் பக்கம் ராமதாஸ் வலிமை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

பாமக பொதுக்குழுவை ராமதாஸ் நடத்த அதிகாரமில்லை என்று கூறுவது எவ்வளவு வெட்கக்கேடானது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே கூட்டணி தொடர்பாக ராமதாஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாமக பொதுக்குழு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+