"IF YOU ARE BAD.. I AM YOUR DAD" பதாகைகளுடன் வந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்.. அன்புமணி மீது அட்டாக்!
புதுச்சேரி: IF YOU ARE BAD I AM YOUR DAD என்ற பதாகைகளுடன் ராமதாஸ் ஆதரவாளர்கள் பாமக சிறப்புப் பொதுக்குழுவில் பங்கேற்றிருப்பது விவாதமாகி இருக்கிறது. ராமதாஸின் பொதுக்குழுவில் பாமகவினர் நேரடியாக அன்புமணியை அட்டாக் செய்திருப்பதால், அன்புமணியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
புதுச்சேரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெற்ற நிலையில், தற்போது ராமதாஸ் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டி இருக்கிறார். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என்று சுமார் 4 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.

இதன் மூலமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்த உச்சத்தை தொட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்குழுவில் ராமதாஸை பாமக தலைவராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ராமதாஸ் பேசுகையில், இங்குக் கூடியுள்ள கூட்டம் காசுக் கொடுத்துக் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. சொந்தமாகக் கூடிய கூட்டம்.
ஒரு சமுதாயத்திற்காக மட்டும் இங்குத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து சமுதாயங்களும் என் பின்னால் வாருங்கள்.. நீங்கள் நினைப்பது நடக்கும்.. 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் கிடைக்கும். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அன்புமணியின் இடத்தில் ராமதாஸ் தனது மகள் காந்திமதியை கொண்டு வந்து அமர வைத்திருந்தார். இதன் மூலமாக ராமதாஸின் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. மகனுக்கு எதிராக மகளைக் கொண்டு வர ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதால், பாமகவினர் மத்தியில் கூடுதல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று புரியாமல் குழம்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவரின் ஆதரவாளர்கள், அன்புமணி மீது சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்தனர். அதுமட்டுமல்லாமல் IF YOU ARE BAD I AM YOUR DAD என்று பதாகைகளுடன் ராமதாஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அதேபோல், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற பதாகைகளும் ஆதரவாளர்களால் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் விரைவில் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணி தலைமையிலான பாமகவையே அங்கீகரித்திருப்பதால், பாமகவில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications