ரமேஷை ஓடிப்போய் காப்பாற்றிய சபாநாயகர்.. தவெக அரசை விமர்சிக்காத கப்சிப் கம்யூனிஸ்ட்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் வரும்போது வணக்கம் வைப்பது குறித்து அமைச்சர் ரமேஷ் பேசியது சலசலப்பை உண்டுபண்ணி விட்டது.. பேரவைத் தலைவர் உடனடியாக ஓடிச்சென்று ரமேஷை பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வந்து இருக்கையில் உட்கார வைக்கிறார். இப்படியே ஒவ்வொருவரையும் அடிக்கடி காப்பாற்றுவதே பேரவைத் தலைவருக்கு வேலையாகிப்போய்விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் களம் சேனலில் பேசியிருக்கும் கோடீஸ்வரன், "சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மட்டும் இல்லையென்றால், அங்கு அடிதடியும் தேவையற்ற பிரச்சனைகளும்தான் நடக்கும். சபாநாயகர் அவை நிகழ்வுகளை திறமையாகக் கையாண்டு, அவையிலிருந்து தேவையில்லாத கருத்துகளை நீக்குகிறார்.

TVK Government

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிடுவதும், அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும்போதும் சட்டமன்றத்தில் முதிர்ச்சியற்ற போக்கு நிலவுகிறது. எப்போதுமே எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் பேசக்கூடிய பேச்சாளர் கிடையாது.. அவர் சபை நிகழ்வுகளில் மிகக் குறைந்த நேரமே பங்கேற்கிறார். அப்படியிருந்தும் அவரை பேச விடுவதில்லை..

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படக்கூடாது என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றம் குறித்து அன்றே கருத்து கூறியிருந்தார்..

அதுபோல ஒரு பதவியில் அமர்ந்த பிறகு, அந்தப் பதவிக்கான மாண்பையும் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும். அமைச்சர்களுடைய பேச்சு மற்றும் புள்ளிவிவரங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும். ஆனால், சட்டமன்றத்திற்குள் நுழையும்போது சபாநாயகருக்கு வணக்கம் தெரிவிக்கும் மரபு தற்போது காணாமல் போய்விட்டது.. அது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது."

வணக்கம் வெக்கலையாம்

சட்டசபையில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, வணக்கம் தெரிவிக்கும் மரபு குறைந்து வருகிறது. சபாநாயகரை வணங்குவது அவையையும் அந்த இருக்கையையும் மதிக்கும் செயலாகும்.

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அவையை அமைதியாக நடத்தப் போராடுகிறார். ஆனாலும் அமைச்சர்கள் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதாலும், சபாநாயகர் அமைச்சர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ரமேஷை காப்பாற்றிய சபாநாயகர்

சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் வரும்போது வணக்கம் வைப்பது குறித்து அமைச்சர் ரமேஷ் பேசியது சலசலப்பை உண்டுபண்ணி விட்டது.. உடனே, பேரவைத் தலைவர் உடனடியாக ஓடிச்சென்று அவரைப் பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வந்து இருக்கையில் உட்கார வைக்கிறார். இப்படியே ஒவ்வொருவரையும் அவ்வப்போது காப்பாற்றுவதே பேரவைத் தலைவருக்கு முக்கிய வேலையாகிப்போய்விட்டது.

ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் புரோட்டோகால் விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதே சமயம், அவர் எழுப்பும் கேள்விகள் மற்றும் அவரது செயல்பாடுகள் ஆளுங்கட்சிக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.. அதனால் அவை குறிப்பிலுள்ள விஷயங்களை அவர் சரியாக பிடித்துப் பேசுகிறார்.

கப்சிப் கம்யூனிஸ்ட்கள்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி தரப்பில் சரியான பதில் வருவதில்லை. அமைச்சர்கள் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல், தரவுகளும் இல்லாமல் தேவையில்லாமல் பேசுகின்றனர்.

அதேபோல ஊழல் புகார்கள் மற்றும் ஆட்சி நிர்வாகக் குறைபாடுகள் குறித்து செய்திகள் வந்தாலே கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கின்றன. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு ஏதோ ஒரு பயம் அல்லது நெருக்கடி இருப்பதால், அவர்களும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதில்லை.

எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் செயல்பாடுகளையும், சட்டசபையில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய போதிய ஆதரவையும் கவனிக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+