தமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. அதிகாலையில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை!
தமிழகத்தில் இன்று காலையில் இருந்து ரமலான் நோன்பு தொடங்கியது.
சென்னை: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து ரமலான் நோன்பு தொடங்கியது. இதையடுத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றுதான் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது. இஸ்லாமியர்கள் அனைவரும் உலகம் முழுக்க தவறாது இதை கடைபிடிப்பார்கள். தானம், தர்மம், பசி, அன்பு இதை உணரவும், மக்களிடத்தில் ஒற்றுமையை அதிகரிக்கவும் இந்த பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.

எப்போதும் ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட பின் நோன்பு கடைபிடிக்கப்படும். உலகம் முழுக்க இது ஒருநாள், அல்லது சில மணி நேர இடைவெளியில் கடைபிடிக்கப்படும். இதை தமிழக அரசின் தலைக்கு காஜிதான் எப்போதும் அறிவிப்பார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று காலையில் இருந்து இஸ்லாமியர்கள் தங்கள் நோன்பை தொடங்கினார்கள்.
காலையில் சூரியன் எழும் முன் எழுந்து, சாப்பிட்டு முடித்துவிட்டு, பின் நாள் முழுக்க நோன்பு இருப்பார்கள். ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருந்துவிட்டு, பின் மாலை சூரியன் மறைந்த பின் நோன்பு துறப்பார்கள்.
இதுபோல் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அதன்பின் இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக முக்கியமான பண்டிகை ஆகும். இந்த நிலையில் இன்றுதான் முதல்நாள் நோன்பு தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications