விவாகரத்தா? கணவரை பிரிந்து வசிப்பது ஏன்? நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் - கணவர் கிருஷ்ணா வம்சி ஆகியோர் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவரது கணவர் கிருஷ்ணா வம்சி ஹைதராபாத்தில் வசித்த வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் விவாகரத்து தொடர்பான விவாதங்கள் கிளம்பிய நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இருவரும் பிரிந்து வாழ்வது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக 'ரா டாக்ஸ்' எனும் 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: ''நாங்கள் இன்னும் திருமண உறவில் தான் இருக்கிறோம். ஆனால் எங்களின் வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகிறோம். இதற்கு 100 சதவீதம் எங்களின் தொழில் தான் காரணம். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

இதற்கு முன்பாக நான் சென்னையில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தேன். அப்போது என்னுடைய குடும்பம் ஹைதராபாத்தில் இருந்தது. மாதத்தில் 15 நாட்கள் சென்னை வந்து மீண்டும் ஹைதராபாத் செல்வேன். இருநகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்வது இயலாத காரியம்.
அதோடு பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று போராட்டம் நடக்கும் நாட்களில் இந்த பயணம் சவாலாக இருந்தது. மேலும் நான் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் என்னுடைய மகன் ரித்விக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டான். இதனால் நானும், எனது கணவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். நான் தொழில் காரணமாக சென்னையில் தங்க தொடங்கினேன். என் மகனை சென்னை பள்ளியில் சேர்த்தேன்.
அதோடு, உறவு முறைகளில் திருணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என நான் கருதுகிறேன் தேவைப்படும்போது தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். உண்மையில் வம்சி (கணவர்) எதற்கு திருமணம்? நாம் சேர்ந்து வாழலோமே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருவேளை அப்போது நான் சம்மதித்து இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
ஏனென்றால் திருமணத்தில் குடும்பங்களும், நம்மை சுற்றியுள்ள பலரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் திருமண உறவிற்கு பிறகு அவர்களுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். நான் சொல்ல வருவது என்னவென்றால் திருமணம் செய்த நபருடன் என்னுடைய உறவு மிகச்சிறப்பாக உள்ளது. அது எப்போதும் அப்படியே தான் இருக்கும்.
நாங்கள் பிரிந்து இருப்பதால் இருவருக்கும் இடையே சண்டை இல்லை. நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்'' என்றார் .ரம்யா கிருஷ்ணன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது கணவர் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் விவாகரத்து தொடர்பான வதந்தி பரவியது. தற்போது அதனை முற்றிலுமாக மறுத்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்தார். 'சந்திரலேகா' என்கிற தெலுங்கு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர். வம்சி இயக்கி இருந்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2005ம் ஆண்டில் மகன் பிறந்தார். அவரது பெயர் ரித்விக் வம்சி.
ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரம்யா கிருஷ்ணன் கடைசியாக நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
