பாலாவை தூண்டுவதை நிறுத்தினால் ரம்யாவுக்கு வெற்றி கிட்டும்.. இல்லாட்டி ஆரியின் கிராஃப்தான் உயரும்!
சென்னை: தனது சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த ரம்யா பாண்டியன் பாலா ஆரி இடையேயான சண்டையின் போது அவர் நடந்து கொண்ட விதம் வில்லியாகவே அதாவது விஷம் போல் அனைவர் மனதிலும் பதிந்துவிட்டது.
ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அருண் பாண்டியனுக்கு உறவினராவார். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 4இல் போட்டியாளராக இருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்தே சேஃப் கேம் விளையாடுவதாக ரம்யா பாண்டியன் சக போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் சீசன் 4இல் குரூபிஸம் இருந்த போதிலும் அவர் எந்த குரூபிலும் இல்லாமல் அனைவருடனும் இருந்தார்.

விஷயங்கள்
குக் வித் கோமாளியில் புகழ்பெற்ற அவர் எல்லா விஷயங்களுக்கும் சிரித்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு புன்னகை அரசி என்ற பட்டமும் உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் சுக்குநூறாக்கிவிட்டார் ரம்யா.

ஆரி பாலா
ஆரி- பாலா இடையே நடந்த சண்டையின் போது அவர்களை தடுக்காமல் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் ஆரி விளக்கம் கொடுக்கும் போது, போதும் போதும் எல்லாரும் களைந்து போங்க என கூறி ஆரியை சொல்லவிடாமல் பாலாவை இழுத்து சென்றார். உங்கள் நண்பரை கூட்டிட்டு போங்க என ஆரி சொன்னதற்கும் ரம்யா மிகவும் நக்கலாக பேசினார்.

ரியோ
நேற்று கமல்ஹாசன் பாலாவை வறுத்தெடுத்துவிட்டார். அப்போது ரியோ, ரம்யாவையும் விட்டு வைக்கவில்லை. ரியோவிடம் ஆரி குறித்து கேட்கும் போது "நாங்கள் அப்படி நினைக்கவில்லை" என்றார். அதற்கு ஆண்டவர் உங்களுக்காக மட்டும் பேசுங்க என்றார். ரியோ முகத்தில் ஈயாடவில்லை.

ரம்யா பாண்டியன்
இதையடுத்து ரம்யாவையும் விட்டு வைக்காத ஆண்டவர், ரம்யா செய்யும் சமாதானம் நியாயமானதாக இல்லை என்றார். இருவருக்கும் சண்டை என்றால் ஒருவர் விளக்கமளிக்கும் போது அதை கேட்க விடாமல் எதிர்தரப்பை இழுத்து கொண்டு செல்வது சரியல்ல என்றார். இதனால் ரம்யா பாண்டியனின் முகம் சுருங்கிவிட்டது.

பிரச்சினைகள்
பாலாவுக்கு சப்போர்ட் செய்வது போல் பிரச்சினைகளை தூண்டிவிடுகிறார். இதிலிருந்து அவர் வெளியே வந்து விளையாட்டை விளையாட்டாக விளையாடினால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம். இல்லாவிட்டால் ஆரியின் கிராஃப்தான் உயரும்!.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications