சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மே 14ம் தேதி ரமலான் கொண்டாடப்படும்.. தலைமை காஜி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் (14ம் தேதி) ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

உலகம் முழுக்க ரம்ஜான் பண்டிகையை கொண்ட இஸ்லாமியர்கள் ஆவலோடு காத்து இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள்.

Ramzan will be celebrated in Tamilnadu on May 14 says Tamilnadu Chief Gaji

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதை இஸ்லாமியர்கள் தீவிரமாக கடைப்பிடித்து, ரம்ஜான் பண்டிகையை கொண்டாட காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு மாத நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது.

பொதுவாக ஷவ்வால் மாதத்திற்கான பிறை தோன்றிய பின், அதை வைத்து ரம்ஜான் தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில், இதுவரை பிறை தென்படவில்லை. ரமலான் பண்டிகைக்கான பிறை இன்று தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் பிறை தென்படாத காரணத்தினால் நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ரம்ஜான் பிறை தெரிந்த மறுநாள்தான் கொண்டாடப்படும். இன்று பிறை தெரியவில்லை. இதையடுத்து நாளைய தினம் இஸ்லாமியர்கள் எப்போதும் போல் நோன்பு இருக்க வேண்டும்.

ஆகவே தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார்.

English summary
Ramzan will be celebrated in Tamilnadu state n May 14 announces Tamilnadu Chief Gaji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X