வர முடியாது.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த ரங்கசாமி! அப்செட்டான அமித் ஷா! முதல்வர் மாநாட்டில் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னை அருகே உள்ள கோவளத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், அமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக பாஜகவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வர் மாநாடு ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார்.

2026 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது. முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். ரங்கசாமியுடன் அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில் அவர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை.

Rangasamy BJP amit shah

85 நாட்களுக்கு மேலாகியும் துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்ததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. தொகுதி வளர்ச்சிப் பணிகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்தன.

புதுச்சேரி அரசியல்

மேலும் அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதல் அமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இலாகா ஒதுக்கீடு

இந்த சந்திப்பில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, 85 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பின்னர் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் சபாநாயகர் விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கும் ரங்கசாமிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளார்.

தென்மாநில முதல்வர்கள் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவில்லை. இந்நிலையில், 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி

அத்துடன் மாநில தலைமைச்செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம்.தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க நிர்வாகியான துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

புறக்கணிப்பு

இதை ஆளுநர் மாளிகையும் உறுதி செய்தது. அதேநேரத்தில் இம்மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பாஜகவுக்கு அமைச்சர் பதவி இருவருக்கும் தந்து கடந்த முறை தந்த இலாகாக்கள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்தது, மத்திய அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகை புரிய இருந்த நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்களுக்கு பிறகே இலாகா அண்மையில் ஒதுக்கப்பட்டது.

பிரதமர் மோடி

தற்போதும் பேரவைத் தலைவர் தேர்தலிலும் இழுபறி நீடிக்கிறது. இச்சூழலில் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டிலும் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகி நூறு நாட்கள் ஆன நிலையிலும் டெல்லி சென்று பிரதமர் மோடியையும் முதல்வர் ரங்கசாமி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+