Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு.. நாமக்கல் மாணவர் முதலிடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த பட்டியலை வெளியிட்டார். கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியலில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் ரஜினீஷ் முதலிடம் பிடித்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியின் நடப்பு ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று முன்பு கூறியிருந்தார். அதன்படி இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மா சுப்பிரமணியன் பேசியதாவது:-

MBBS Medical College M Subramanian

கடந்த ஆண்டை விட தற்போது 150 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தமான எம்பிபிஎஸ் க்கான இடங்கள் 9200. பிடிஎஸ் என்ற பல் மருத்துவத்திற்கான இடங்கள் 2150. இந்த வகையில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ள முதல் 10 மாணவர்களின் பெயரை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். நாமக்கலை சேர்ந்த மாணவன் ரஜினிஷ் என்ற மாணவன் 720 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார்.

முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிதும், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு பட்டியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 22, 23 ஆம் தேதிகளில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 36,100 பேர் மட்டும் விண்னப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+