வாவ்.. 31 பேர் 200க்கு 200! கால்நடை மருத்துவப் படிப்பு ரேங்க் லிஸ்டில் அசத்தல் -கவுன்சிலிங் எப்போது?
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSC & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 12.06.2023 முதல் 30.06.2023 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்பட்டன.

மொத்தமாக பெறப்பட்ட 22,535 விண்ணப்பங்களுள், 18,752 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும் (BVSc & AH), 3783 விண்ணப்பங்கள். இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) பாடப்பிரிவிற்கும் முறையே பெறப்பட்டன.
2023-24ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் 26.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் விவரங்களை https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in இணையதளங்களின் வாயிலாக காணலாம்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு) - BVSc & AH (Academic), 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர் ராகுல் காந்த் எம், தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த கனிமொழி வி.தென்காசி மாவட்டத்தை சார்ந்த முத்துலட்சுமி எஸ். அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நந்தினி கே, திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த கிரேஸ் கிரிஷ்டி எ, தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விஷ்வா டி, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வசந்தி வி. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த லோபாஷினி எம், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த சக்தி குமரன் எஸ் மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த கவுசிகா எஸ் ஆகிய 10 மாணவ / மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.
இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech) தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த விஷ்ணுபிரகாஷ் எம் 200 க்கு 199.500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த மாணவி தர்ஷா (198.500) இரண்டாம் இடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த வர்ணஓவியா எம் (198.000) மற்றும் கடலூர் மாவட்டத்தை சார்ந்த லோகேஷ் குமார் பி (198.000) மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான (7.5%) முன்னுரிமை இடஒதுக்கீட்டு பிரிவின்கீழ், சேலம் மாவட்டத்தை சார்ந்த விக்னேஷ் கே மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த அஜய் எஸ் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பானுபிரியா வி (199.500) மற்றும் மதுரை மாவட்டத்தை சார்ந்த நித்யா டி (199,500) பெற்று இரண்டாம் இடத்தையும் மதுரை மாவட்டத்தை சார்ந்த தாமரை செல்வி ஆர் பி (198.500) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிவா வி (198.500) அவர்கள் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக தரவரிசை பட்டியல் பற்றி ஏதேனும் விசாரணை இருப்பின் தொலைபேசி எண். 044 - 2999 4348 / 2999 4349 அழைக்கவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications