Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஸ்பீடா போகாதீங்க'.. தாறுமாறாக பைக் ஓட்டிய ரேபிடோ டிரைவர்.. தட்டி கேட்ட பயணி மீது ஹெல்மெட் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு ரேபிடோவில் சென்ற பயணி, வேகமாக போகாதீங்க, மெதுவாக ஓட்டுங்க என்று சொன்னதால் கடுப்பான ரேபிடோ டிரைவர், பயணியை ஹெல்மெட்டால் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோவை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல ரேபிடோ, ஓலா, உபர் போன்ற நிறுவனங்களின் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான பயணம், குறைந்த செலவு, தேவைப்படும் இடங்களில் பிக் அப், டிராப் போன்ற வசதிகள் இருப்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த சேவைகளை மக்கள் விரும்புகின்றனர்.

குறிப்பாக, இதில் இருசக்கர வாகன வசதியை அதிக அளவிலானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நபர் செல்வதற்கு ஆட்டோ, கார் போன்றவை தேவைப்படாது என்பதாலும், பைக் டாக்ஸிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் ஒரு நபர் போக்குவரத்துக்கு பைக் டாக்ஸிகள் பெரிதும் உதவிபுரிந்து வருகின்றன. ஒருபக்கம் பாசிட்டிவாக இந்த சேவைகள் இருந்தாலும், ஓலா, உபர், ரேபிடோ ஓட்டுநர்கள் மற்றும் அதன் சேவைகளின் மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

rapido-a-rapido-driver-in-chennai-has-caused-a-stir-after-he-attacked-a-passenger-with-his-helmet

அந்த வகையில் சென்னையில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கிய ரேபிடோ ஓட்டுநரிடம், மெதுவாகச் செல்லுமாறு கூறிய பயணியை அந்த டிரைவர் ஹெல்மெட்டால் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கத்துக்குச் செல்வதற்காக ரேபிடோ செயலியில் பைக் டாக்ஸியை நேற்று முன்தினம் புக் செய்துள்ளார். பின்னர், ராஜசேகரை அழைத்துச் செல்வதற்காக ராயபுரத்தைச் சேர்ந்த ரேபிடோ டிரைவர் கிதியோன் என்பவர் திருவல்லிக்கேணிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து, கிதியோனின் பைக்கில் ஏறி ராஜசேகர் சென்றுள்ளார். அப்போது, கிதியோன் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ராஜசேகர் வேகாமாக போகாதீர்கள், மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் ராஜசேகர் கூறியதை கேட்காமல் கிதியோன் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

அப்போது, அண்ணாசாலை, தபால் நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் மீது மோதுவது போல கிதியோன் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ராஜசேகர் பைக்கை நிறுத்துங்கள்.. என் பயணத்தை ரத்து செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கிதியோன், ராஜசேகரை ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்து போக்குவரத்து போலீஸார் இதுகுறித்து விசாரித்து ரேபிடோ ஓட்டுநரான கிதியோனை பிடித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். மெதுவாக வாகனத்தை ஓட்டச் சொன்ன பயணியை ரேபிடோ ஓட்டுநர் ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+