Rapido driver: தொடையில் கை வைத்த ரேபிடோ டிரைவர்.. வீடியோ எடுத்து பதிவிட்ட பயணி.. அடுத்து நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ரேபிடோ செயலில் புக் செய்து பைக்கில் பயணம் செய்வது நகர்புறங்களில் தற்போது அதிகரித்து வருகிறது. இதில் பயணிக்க கூடிய பயணிகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கவலைகளும் சமூக ஆரவலர்கள் மத்தியில் எழுப்பப்படும் நிலையில், ரேபிடோவில் பயணம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரிடம் ரேபிடோ கேப்டன் எல்லை மீறியுள்ளார். இந்த காட்சிகளை அந்த சிறுவன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், ரேபிடோ கேப்டன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது ஊருக்கு அருகில் இருக்கும் இடத்திற்கு செல்ல ரேபிடோ புக் செய்துள்ளார். ரேபிடோ கேப்டனும் சில நிமிடங்களில் அங்கு வந்துவிடவே, ஓடிபி பதிவிட்டு பயணத்தை உறுதி செய்துவிட்டு பைக்கில் ஏறி சிறுவனும் சென்றுள்ளார்.

Rapido driver harassed young Passenger he records and posts video What happened next

தொடையில் கை வைத்து தொந்தரவு

பைக் சிறிது தூரம் சென்றதும், நடுத்தர வயதை சேர்ந்த ரேபிடே டிரைவர், அந்த 17 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். முதல் முறையாக தெரியாமல் கை பட்டு இருக்கலாம் என நினைத்த சிறுவன், அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், சில நிமிடங்களில் மீண்டும் தொடையில் கை வைத்துள்ளார்.

இதனால் அதிர்ந்து போன சிறுவன், சமயோசிதமாக யோசித்து அதனை அப்படியே தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை, இன்ஸ்டகிராமில் ரேபிடோவை டேக் செய்து அந்த 17 வயது சிறுவன் பதிவிடவே, உடனடியாக ரேபிடோவும் பதிலளித்து இருந்தது. ரேபிடோ வெளியிட்ட பதிவில், இதுபோன்ற செயல்களை மிகவும் தீவிரமான பிரச்சினையாக எடுத்துக்கொள்கிறோம்.

நன்றி தெரிவித்த சிறுவன்

இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்களின் பயண ஐடி உள்ளிட்ட விவரங்களை பகிருங்கள். உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியிருந்தது. உடனடியாக அந்த டிரைவரை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்ட நிலையில், அந்த ரேபிடோ கேப்டனை நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும் கூறியது. ரேபிடோ உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக ரேபிடோ நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த17 வயது சிறுவன் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

"நண்பர்களே ரேபிடோ டீம் நடவடிக்கை எடுத்துள்ளது. உங்களின் ஆதரவுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். ரேபிடோவில் பயணித்த சிறுவனுக்கு நேர்ந்த இந்த நிகழ்வு பற்றி நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர். இதுபோன்ற செயல்களை இனி நடைபெறாதவறு ரேபிடோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தைகைய வரம்பு மீறிய செயல்கள் நடந்தால் உடனடியாக புகாரளிக்க ஏதுவாக தனி ஆப்ஷன்களையும் கொண்டு வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

சிறுவனின் துணிச்சலுக்கு பாராட்டு

இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இந்த ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டதால் இவர் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு எத்தனை பேருக்கு இப்படி தொல்லை கொடுத்து இருப்பார். நல்ல வேளையாக இந்த 17-வயது சிறுவன் துணிச்சலாக செயல்பட்டு பிடித்து கொடுத்துள்ளார். சிறுவனின் துணிச்சலை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சிறுவன் பதிவிட்ட அந்த வீடியோவானது வேகமாக பரவி வருகிறது. 17-வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ரேபிடோ டிரைவருக்கு எதிராக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதா? அல்லது காவல்துறை தாமாக முன்வந்து விசாரணை எதுவும் செய்ததா? மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+