கருணாநிதி சிலை திறப்பு விழா.. கனிமொழியுடன் வந்த ராசாத்தி அம்மாள்.. நெகிழ்வாக வரவேற்ற ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு மகள் கனிமொழி எம்பியுடன் ராசாத்தி அம்மாள் வந்துள்ளார். அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

எம்ஜிஆர் மறைவு
எம்ஜிஆர் மறைவின் போது அண்ணா சாலையில் தகர்க்கப்பட்ட கருணாநிதியின் சிலை 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைத் திறப்பு விழாவிற்கு மகள் கனிமொழி எம்பியுடன் ராசாத்தி அம்மாள் வருகை தந்துள்ளார். ராசாத்தி அம்மாள் முதல் வரிசையில் முதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்திருந்தார்.

கனிமொழி
பின் வரிசையில் கனிமொழி, தமிழரசு, செல்வி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். முன்னதாக இந்த விழாவில் வருகை தந்த ராசாத்தி அம்மாளை முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஸ்டாலின் வெற்றி பெற்ற பிறகும் சரி, முதல்வராக பதவியேற்ற போதும் சரி ராசாத்தி அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிறந்தநாள்
அது போல் தனது பிறந்தநாளின் போது கோபாலபுரத்தில் தயாளு அம்மாளிடம் ஆசி வாங்குவதை போல் சிஐடி காலனி வீட்டில் உள்ள ராசாத்தி அம்மாளிடமும் ஸ்டாலின் ஆசி வாங்குவார். கருணாநிதியின் பிறந்த நாளன்றும் சிஐடி காலனியில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்த் தூவி அஞ்சலி செலுத்துவார்.

ராசாத்தி அம்மாளிடம் நலம் விசாரிப்பு
இந்த விழாவிற்கு வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ராசாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்தார். கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஆகியோரை வெங்கய்ய நாயுடு அழைத்து அருகே நிற்க வைத்துக் கொண்டார். கருணாநிதியின் சிலைக்கு மலர்த தூவி மரியாதை செலுத்தினர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications