ஹெலிபேடே இருக்கு.. மாதம் ரூ.15 லட்சம் கரண்ட் பில்.. இந்திய கோடீஸ்வரர்களின் பங்களா பின்னால் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார வேறுபாடுகளுக்கு மத்தியில், நாட்டின் புகழ்பெற்ற பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பிரம்மாண்ட வீடுகள் குறித்த தகவல்கள் எப்போதும் மக்களிடையே பெரும் சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.. அந்த வகையில், இந்தியாவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரமிக்க வைக்கும் ஆடம்பர இல்லங்களின் சிறப்பம்சங்களை இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அடிப்படை தேவைகளில் ஒன்று இருப்பிடம். இந்தியாவில் அன்றாட வாழ்வாதாரத்திற்காகவும், தலைசாய்க்க ஒரு சின்ன கூரைக்காகவும் ஏங்கும் மனிதர்கள் ஒருபுறம் வாழ்ந்து கொண்டிருக்க, இன்னொருபக்கம் தங்களின் கனவு இல்லத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடும் பிரபலங்களும் வாழ்ந்து வருகிறார்கள்..

Ratan Tata Bakhtawar

இத்தகைய பொருளாதார வேறுபாடுகளுக்கு மத்தியில், இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் விலையுயர்ந்த சொகுசு வீடுகள் குறித்த தகவல்கள் மக்களிடையே எப்போதும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி

அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் "ஆண்டிலியா" மாளிகை உலக அளவில் தனி கவனம் பெறுகிறது. தெற்கு மும்பையில் 27 தளங்களுடன் கம்பீரமாக அமைந்திருக்கும் இந்த இல்லத்தின் மதிப்பு சுமார் 6,000 கோடி முதல் 12,000 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக, உலகின் மிக விலையுயர்ந்த 2வது குடியிருப்பாக இது கருதப்படுகிறது. ஹெலிபேட் வசதிகள், பிரத்யேக திரையரங்கம் மற்றும் நிலநடுக்கத்தை தாங்கும் அதிநவீன வடிவமைப்பு என பல சிறப்பம்சங்கள் இதில் நிறைந்துள்ளன.

வைர வடிவிலான "குலிதா" இல்லம்

அதேபோல இஷா அம்பானியின் வைர வடிவிலான "குலிதா" இல்லம் (ரூ. 450 கோடி), 30 ஆயிரம் சதுர அடியில் 20 படுக்கையறைகளுடன் கூடிய குமார் மங்கலம் பிர்லாவின் ஜாதியா ஹவுஸ் ரூ. 425 கோடியில் அமைந்துள்ளது..

ரேமண்ட் குழும கௌதம் சிங்கானியாவின் 30 மாடிகள் கொண்ட ஜே.கே. ஹவுஸ் ரூ. 6,000 கோடியிலும், அனில் அம்பானியின் 70 மீட்டர் உயரமுள்ள "அபோட்' மாளிகை" ரூ. 5,000 கோடியிலும் அமைந்துள்ளன. இவையெல்லாம் ஹெலிபேட், ஸ்பா, பிரத்யேகக் கோவில்கள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களுடன் ஆடம்பரத்தின் உச்சமாக விளங்குகின்றன.

ரத்தன் டாடாவின் பங்களா

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கடல்முகப்பிலுள்ள "பேர்லான்" பங்களா (ரூ. 150 கோடி), 1982-ல் தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பியால் பரிசளிக்கப்பட்ட அமிதாப் பச்சனின் "ஜல்சா" இல்லம் (ரூ. 120 கோடிக்கு மேல்) மற்றும் பெங்களூரின் 35-வது மாடியில் 360 டிகிரி நகரக் காட்சியுடன் அமைந்துள்ள விஜய் மல்லையாவின் "ஸ்கை மேன்ஷன்" (ரூ. 100 கோடி) ஆகிய வீடுகள் பிரம்மாண்ட நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நூலகங்களுடன் கூடிய உலகத்தரமான சொகுசு வாழ்விடங்களாகத் திகழ்கின்றன.

தொழிலதிபர்களைத் தொடர்ந்து, சினிமா துறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களின் வீடுகளும் இந்த பட்டியலில் அடங்கும்.. பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மன்னாத் இல்லம் மும்பை பாந்த்ரா பகுதியில் அரபிக்கடலை நோக்கியபடி அமைந்துள்ளது.

பாலிவுட் பிரபலங்களின் காஸ்ட்லி வீடுகள்

சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த 6 அடுக்கு மாளிகையில், நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் ஜிம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதே பகுதியில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடியின் ரூ.119 கோடி மதிப்பிலான வீடும், நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அப்பார்ட்மெண்ட் இல்லமும் அமைந்துள்ளன.

அதேபோல, பாலிவுட்டின் பிரபல ஜோடியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஆகியோரின் 'கிருஷ்ணா ராஜ்' பங்களா புதுப்பிக்கப்பட்டு, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில் மிளிர்கிறது. சினிமா பிரபலங்களின் வீடுகளிலேயே இது அதிக மதிப்புடைய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ஜுஹு பகுதியில் அமைந்துள்ள கடலோர இல்லமும் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.. எளிய மக்களின் பார்வையில் இவையெல்லாம் பிரமிப்பை ஏற்படுத்தினாலும், இத்தகைய இல்லங்கள் இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் ஆடம்பர வாழ்வியலின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+