ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி.. ரேஷன் கடைகளில் மாற்றம் வருகிறது.. இனிமேல் இப்படித்தானாம்.. சூப்பர்
சென்னை: தமிழக கூட்டுறவு துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அறிவுறுத்தலும், ரேஷன் கடைகளுக்கு சென்றுள்ளது. என்ன அது?
பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்தவகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வரப்படும் நிலையில், பாயிண்ட் ஆப் சேல் என்ற கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வசதி: இந்த விதி அமலுக்கு வந்த பிறகு, ரேஷனை எடை போடுவதில் குளறுபடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகளுக்கு எந்தச்சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க கூடாது என்பதற்காகவே, ரேஷன் டீலர்களுக்கு இந்த பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் ஆஃப்லைன்+ ஆன்லைன் என இரண்டு முறையிலும் வேலை செய்யும். ரேஷன் பொருட்களை நாட்டிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும், தங்களது டிஜிட்டல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி எடுக்க முடியும். ஒரு ஏரியாவிலிருந்து மற்றொரு ஏரியாவுக்கு இடம் மாறிச் செல்லும் குடும்பங்களுக்கும் இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.
வசதிகள்: இதனால், ஒவ்வொரு கடையிலும் நடக்கும் விற்பனை, இருப்பு விபரங்களை இணையதளம் வாயிலாக அதிகாரிகள், எங்கிருந்தபடியும் உடனுக்குடன் கண்டறிய முடியும்.ரேஷன் கடைகளில் மோசடிகளைத் தவிர்க்கவும் வருமானத்தையும் உயர்த்த முடியும்.
இந்நிலையில், பாயிண்ட் ஆப் சேல் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றினை தமிழக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, ரேஷன் கடைகளை நடத்தும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் முழுதுமாக கணினிமயம் ஆக்கப்படவில்லை.. அதனால், சில கடைகளில், ஊழியர்கள் விற்பனை விபரங்களை காகித பதிவேடுகளில் பதிவு செய்வதாக புகார்கள் வருகின்றன..
அதிரடி உத்தரவு: அதனால்தான், கிடங்கு வைத்திருக்கும் கூட்டுறவு சங்கங்கள் இணைய வசதி மற்றும் பிரின்டருடன் கூடிய கணினியை கிடங்கில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் இனிமேல் காகித ஆவணங்களை பயன்படுத்த கூடாது என்றும், அனைத்தும் கருவியில் மட்டுமே பதிவு செய்யுமாறும் ஊழியர்களை அறிவுறுத்தமாறு, மண்டல இணை பதிவாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications
