ரேஷனில் வந்தது மாற்றம்.. ஒருத்தரும் ஏமாற முடியாது.. தமிழக அரசு அதிரடி..ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை, தமிழக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பலனை தரும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழக அரசு, ரேஷன்கார்டுதாரர்களின் நலனுக்காகவே, நிறைய அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. ரேஷன்தாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது.
எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில்கூட, தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருக்கிறது.. இதற்காகவே சில புரோக்கர்களும் உள்ளதாக தெரிகிறது.. இவர்கள்தான், கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்...

ரேஷன் அட்டைதாரர்கள்: இதன்காரணமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்றும் புகார்கள் கிளம்பி உள்ளன. அதேபோல, மாத இறுதியில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்காத பொருள்களுக்கும் வாங்கியதாக ரேஷன் கடை ஊழியர்கள் பதிவு செய்கிறார்களாம்..
இதுகுறித்த புகார்கள் நிறைய வர ஆரம்பித்துள்ளது.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும்படியை அதிகாரிகள் உடனடியாக துவங்கி உள்ளனர்.
கட்டாய விற்பனை: கட்டாய விற்பனை செய்வது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.. இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்னொரு புகார் கிளம்பி உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டுள்ளது..
விற்பனை: ஆனால், அதை, பல ஊழியர்கள் பின்பற்றுவதில்லையாம்... அனைத்து பொருட்களும் வரவில்லை என்று சொல்லி, என கூறி, ஒரு நாள் அரிசி, இன்னொரு நாள் சர்க்கரை என்று அவரவர் விருப்பத்துக்கு தருகிறார்களாம். சில சமயம், கடையில் பொருள் இல்லை என்று கார்டுதாரர்களை திருப்பி அனுப்பியும் விடுகிறார்கள்.
இப்படியான முறைகேடுகளை தடுப்பதற்காகத்தான், டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்திருக்கிறது.
புது செயலி: இந்த ஆப்பை ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அந்த செயலியில், கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விபரங்களை, துல்லியமாக அறிய முடியுமாம்.
இதுவரை இந்த செயலியை, மொத்தமுள்ள 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், வெறும் 6.67 லட்சம் பேர் மட்டுமே உணவு வழங்கல் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக சொல்கிறார்கள். எனவே மற்றவர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், ரேஷன் பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று உணவு மற்றும் கூட்டுறவு துறை அறிவுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications