அரிசி அட்டைதாரர்கள் இதை நோட் பண்ணுங்க.. ரேஷன் கடைகளுக்கு செம குஷி.. கூட்டுறவு துறையின் ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. இது ரேஷன் கடை ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்தி வருகின்றன.. கூட்டுறவு துறையின் பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

ரேஷன் கடைகள்: ரேஷன் கடைகளுக்கான வாடகை, ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், பொருட்களை அனுப்புவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கு அரசின் சார்பில் வருடந்தோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடை செலவினங்களுக்கான மானியமாக, கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.300 கோடி வழங்குமாறு கூட்டுறவு துறை சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.150 கோடியை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
அதிகாரிகள்: அதுபோலவே, 2023-2024ம் ஆண்டிற்கான ரேஷன் கடைகளுக்கான மானியமாக 273 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. 2023-2024ம் ஆண்டிற்கான மானிய தொகையாக 273.92 கோடி ரூபாயை விடுவித்து தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.
இந்த மானிய தொகை மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. மானியம் தொகையை அரசு விடுவித்துள்ளதால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
போன் நம்பர்: இதனிடையே, ரேஷன் அரிசி கடத்தல்கள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கூறியிருக்கிறது. குறிப்பாக இந்த ஐந்து மாதங்களில் 3,794 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.. இதைத்தவிர, கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications