ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட பயனாளிகளின் கைவிரல் ரேகை பதிவு அடிப்படையில் ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வதற்காக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை ரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு ரேஷன் அட் டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tamil Nadu Ration Card Ration Shop

அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைவிரல் ரேகை பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு வருகிற 29 ஆம் தேதி (இன்று) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, இதுவரை, ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+